இந்திய அணி போராடி தோல்வி : தோனி, ஜடேஜா போராட்டம் வீண்..

இந்திய அணி போராடி தோல்வி : தோனி, ஜடேஜா போராட்டம் வீண்..

இந்திய அணி போராடி தோல்வி : தோனி, ஜடேஜா போராட்டம் வீண்..
Published on

நியூசிலாந்திற்கு எதிரான உலகக் கோப்பை அரையிறுதிப் போட்டியை இந்திய அணி போராடி தோற்றது.

நியூசிலாந்திற்கு எதிரான உலகக் கோப்பை அரையிறுதிப் போட்டியில் இந்திய அணி 6 விக்கெட்டுகளை இழந்து பரிதாப நிலையில் போராடியது. முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து அணி 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 239 ரன்கள் சேர்த்தது. அந்த அணியில் ராஸ் டைலர் 74 (80) மற்றும் வில்லியம்சன் 67 (95) ரன்கள் எடுத்தனர். இந்திய அணியில் புவனேஷ்வர் குமார் 3 விக்கெட்டுகளை சாய்த்தார். 

இதையடுத்து களமிறங்கிய இந்திய அணியில் தொடக்க ஆட்டக்காரர் ரோகித் ஷர்மா ஒரு ரன்னில் அவுட் ஆனார். அவரைத் தொடர்ந்து கேப்டன் கோலியும் ஒரு ரன்னில் அவுட் ஆக இந்திய ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்தனர். பின்னர் கே.எல்.ராகுலும் ஒரு ரன்னில் விக்கெட்டை இழந்து ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியை கொடுத்தார். இதையடுத்து வந்த தினேஷ் கார்த்திக் 6 (25) ரன்களில் அவுட் ஆனார். 

பின்னர் சற்று நேரம் நிலைத்து ஆடிய ரிஷாப் மற்றும் ஹர்திக் பாண்ட்யா தலா 32 ரன்கள் எடுத்து விக்கெட்டை பறிகொடுத்தனர். இதனால் இந்திய அணி 92 ரன்களில் 6 விக்கெட்டுகளை இழந்து நிலைகுலைந்தது. அணியின் சரிவை தோனியும், ஜடேஜாவும் மெல்ல சரி செய்தனர். அவர்களின் ஆட்டத்தால் நியூஸிலாந்து அணி நிலை குலைந்தது. அசத்தலாக விளையாடிய ஜடேஜா சிக்ஸர்களுடன் அரைசதம் அடித்தார். ஜடேஜாவின் அதிரடியில் இந்திய அணி 46 ஓவர்களில் 198 ரன்களை அடைந்தது. 47 ஓவர்கள் முடிவில் 18 பந்துகளுக்கு 37 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலையில் இந்தியா இருந்தது. 

77 (59) ரன்களில் ஜடேஜா ஆட்டமிழந்தார். இதனால் 3 விக்கெட்டுகள் கையிலிருக்க 13 பந்துகளில் 32 ரன்கள் எடுக்க வேண்டிய நிலைக்கு இந்தியா தள்ளப்பட்டது. தோனி 50 (72) ரன்களில் ரன் அவுட் ஆகினார். ரசிகர்கள் முகத்தில் பெரும் சோகம் வந்தது. அதைத்தொடர்ந்து புவனேஷ்குமார் விக்கெட்டை இழந்தார். 49.3 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 221 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. 19 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற நியூஸிலாந்து அணி இறுதிப் போட்டிக்கு தேர்வானாது. 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com