5 ரன்களில் 3 விக்கெட் - ஏமாற்றிய கோலி, ரோகித், ராகுல்
உலகக் கோப்பை அரையிறுதிப் போட்டியில் இந்திய அணி 5 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளை இழந்தது.
உலகக் கோப்பை தொடரின் முதல் அரையிறுதிப் போட்டி இந்தியா மற்றும் நியூஸிலாந்து அணிகள் இடையே நேற்று நடைபெற்றது. இந்தப் போட்டியில் டாஸ் வென்று முதல் பேட்டிங் செய்தது. போட்டி முதல் நாள் மழையால் தடைபட்டு இன்று இரண்டாம் நாள் நடைபெற்று வருகிறது. 50 ஓவர்கள் முடிவில் நியூசிலாந்து அணி 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 239 ரன்கள் எடுத்தது. அந்த அணியில் ராஸ் டைலர் 74 (90), கேன் வில்லியம்சன் 67 (95) மற்றும் 28 (51) ரன்கள் எடுத்தனர். இந்திய அணியில் புவனேவஸ்குமார் 3 விக்கெட்டுகளை சாய்த்தார்.
இதையடுத்து 240 ரன்கள் இலக்கு என களமிறங்கிய இந்திய அணியில் தொடக்க ஆட்டக்காரர் ரோகித் ஷர்மா ஒரு ரன்னில் அவுட் ஆகினார். அவரைத் தொடர்ந்து கேப்டன் கோலியும் ஒரு ரன்னில் அவுட் ஆக இந்திய ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்தனர். பின்னர் கே.எல்.ராகுலும் ஒரு ரன்னில் விக்கெட்டை இழந்து ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சி கொடுத்தார். இந்திய அணி 5 ரன்களில் 3 விக்கெட்டுகளை இழந்து தடுமாறி வருகிறது.