'டாஸ்' வென்ற இந்தியா முதலில் பேட்டிங் - நெதர்லாந்துக்கு இமாலய இலக்கை நிர்ணயிக்குமா?

'டாஸ்' வென்ற இந்தியா முதலில் பேட்டிங் - நெதர்லாந்துக்கு இமாலய இலக்கை நிர்ணயிக்குமா?
'டாஸ்' வென்ற இந்தியா முதலில் பேட்டிங் - நெதர்லாந்துக்கு இமாலய இலக்கை நிர்ணயிக்குமா?

இந்தியாவுடன் நெதர்லாந்து அணி மோதும் முதல் சர்வதேச டி20 போட்டி இதுவாகும்.

ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் தற்போது சூப்பர்12 சுற்று ஆட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இன்றைய லீக் ஆட்டத்தில் இந்தியா - நெதர்லாந்து அணிகள் மோதுகின்றன. இப்போட்டிக்கான டாஸை வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது.

தனது முதல் ஆட்டத்தில் பாகிஸ்தானுடன் மோதிய இந்திய அணி, விராட் கோலியின் அதிரடி ஆட்டத்தால் கடைசி பந்தில் த்ரில் வெற்றியை ருசித்தது. இந்நிலையில் தனது 2வது ஆட்டத்தில் அனுபவம் குறைந்த நெதர்லாந்தை எதிர்கொள்கிறது.

இந்திய அணியில் தொடக்க வரிசை பேட்டிங் தற்போது தடுமாற்றத்தில் உள்ளது. எனவே இன்றைய ஆட்டத்தில் இந்திய அணியின் முன்வரிசை வீரர்கள் தங்களது தவறை திருத்திக் கொண்டு பழைய நிலைக்கு திரும்ப இந்த ஆட்டம் அருமையான சந்தர்ப்பம். மற்றபடி பேட்டிங் மற்றும் பவுலிங்கில் வலுவாக இருக்கும் இந்திய அணி, இன்றைய போட்டியில் எளிதில் வெற்றி பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

நெதர்லாந்து அணி தனது முதல் போட்டியில் வங்காளதேசத்திடம் 9 ரன்கள் வித்தியாசத்தில்தான்  தோல்வி அடைந்தது. அதே போன்ற போராட்டத்தை இன்றும் வெளிப்படுத்த அந்த அணியினர் முயற்சிப்பார்கள்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com