அயர்லாந்துக்கு எதிராக களமிறங்கும் ஸ்மிருதி தலைமையிலான இளம்படை!
இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் வந்திருக்கும் அயர்லாந்து மகளிர் கிரிக்கெட் அணி ஸ்மிருதி மந்தனா தலைமையிலான இந்திய அணியுடன் 3 ஒருநாள் போட்டிகளில் மோதவுள்ளது. இதன் முதல் போட்டி நாளை ராஜ்கோட்டில் தொடங்க உள்ளது. 2வது மற்றும் 3வது போட்டிகள் ஜனவரி 12, 15 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ளன.
மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிராக ஒருநாள் மற்றும் டி20 தொடர்களை வென்ற இந்திய அணி, மிகுந்த வலுவாக உள்ளது. மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான தொடரில் கேப்டன் ஹர்மன்பிரீத் கௌர் அணியை வழிநடத்திய நிலையில், அயர்லாந்துக்கு எதிரான தொடரில் அவருக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து, இந்திய அணியை ஸ்மிருதி மந்தனா தலைமை தாங்கவுள்ளார். அணியின் துணை கேப்டனாக தீப்தி சர்மா நியமிக்கப்பட்டுள்ளார். அதுபோல் வேகப்பந்துவீச்சாளர் ரேணுகா சிங்குக்கும் ஓய்வளிக்கப்பட்டுள்ளது. அவருக்குப் பதிலாக டைட்டாஸ் சாது , சைமா தாகூர் ஆகிய வேகப்பந்து வீச்சாளர்களுக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. அதுபோல் மேற்கிந்திய தீவு டி20 தொடரில் அசத்திய ரக்வி பிஸ்ட் ஒருநாள் அணியில் இடம்பெற்றுள்ளார்.
இந்திய அணி அயர்லாந்துக்கு எதிராக இதுவரை 12 ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ளது. அனைத்துப் போட்டிகளிலுமே இந்திய அணியே வெற்றி பெற்றுள்ளது. கடைசியாக கடந்த 2023 ஆம் ஆண்டு உலகக் கோப்பைத் தொடரின்போது, 5 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி அயர்லாந்தை வீழ்த்தியது. அயர்லாந்துக்கு எதிரான இந்திய அணியின் ஆதிக்கம் தொடருமா என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.
வீராங்கனைகள் விவரம்
ஸ்மிருதி மந்தனா (கேப்டன்), தீப்தி ஷர்மா (விசி), பிரதிகா ராவல், ஹர்லீன் தியோல், ஜெமிமா ரோட்ரிக்ஸ், உமா செத்ரி (வாரம்), ரிச்சா கோஷ் (வாரம்), தேஜல் ஹசாப்னிஸ், ரக்வி பிஸ்ட், மின்னு மணி, பிரியா மிஸ்ரா, தனுஜா கன்வர், டைட்டாஸ் சாது , சைமா தாகூர், சயாலி சத்கரே