விளையாட்டு
இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடர்... வெற்றி பாதையில் பயணிக்குமா இந்திய அணி..?
இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடர்... வெற்றி பாதையில் பயணிக்குமா இந்திய அணி..?
இந்தியா-இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டி இன்று நடைபெறுகிறது.
புனேவில் நடைபெறும் போட்டி மதியம் ஒன்றரை மணியளவில் தொடங்குகிறது. விராட் கோலி தலைமையில் களமிறங்கும் இந்திய அணியில் தோனி, யுவராஜ் சிங் ஆகிய அனுபவ வீரர்கள் உள்ளனர். ஷீகர் தவானுடன் ரஹானே அல்லது ராகுல் தொடக்க வீரராக களமிறங்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஹர்திக் பாண்ட்யா, ரவீந்திர ஜடேஜா, கேதர் ஜாதவ், அஷ்வின் ஆகிய ஆல்ரவுண்டர்களும் அணியில் உள்ளனர். ஜஸ்பிரித் பும்ரா, உமேஷ்யாதவ் ஆகியோரின் வேகப்பந்து வீச்சும் இந்திய அணிக்கு கைகொடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இயான் மோர்கன் தலைமையில் களமிறங்கும் இங்கிலாந்து அணியில் ஜேசன் ராய், அலெக்ஸ் ஹேல்ஸ், ஜோ ரூட், ஜோ பட்லர், பென் ஸ்டோக்ஸ், கிறிஸ் வோக்ஸ் என சிறந்த வீரர்கள் நிரம்பியுள்ளனர்.