329க்கு இந்தியா ஆல் அவுட் - ரிஷப் பன்ட் ஏமாற்றம்

329க்கு இந்தியா ஆல் அவுட் - ரிஷப் பன்ட் ஏமாற்றம்

329க்கு இந்தியா ஆல் அவுட் - ரிஷப் பன்ட் ஏமாற்றம்
Published on

இங்கிலாந்து அணிக்கு எதிரான 3வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி முதல் இன்னிங்சில் 329 ரன்களுக்கு ஆட்டமிழந்துள்ளது.

இந்திய கிரிக்கெட் அணி, இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் போட்டியில், இந்திய அணி போராடி தோல்வியடைந்தது. 2 வது டெஸ்ட் போட்டி லார்ட்ஸ் மைதானத்தில் நடந்தது. இதிலும் இந்திய அணி தோல்வியை தழுவி, தொடரில் 0-2 என்ற கணக்கில் பின்தங்கியுள்ளது. மூன்றாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி நாட்டிங்காமில் நேற்று தொடங்கியது. 

டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பந்துவீச தீர்மானித்தது. இதனையடுத்து முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி ஒரு கட்டத்தில் 82 ரன்களுக்கு 3 விக்கெட்களை இழந்து தடுமாறியது. அப்போது, இந்திய அணியை கேப்டன் விராத் கோலியும் துணை கேப்டன் ரஹானேவும் மீட்டனர்.  

நிதானமாக விளையாடிய இவர்கள் அரை சதம் அடித்தனர். விராத் கோலி தனது 18-வது அரை சதத்தை பதிவு செய்தார். அவரைத் தொடர்ந்து ரஹானே 13-வது அரை சதத்தை பதிவு செய்தார். பின்னர் ரஹானே 81 ரன்களில் பிராட் பந்துவீச்சில் குக்கிடம் கேட்ச் ஆகி வெளியேறிய நிலையில், சதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட விராத் கோலி 97 ரன்களில் அடில் ரஷித் பந்தில் கேட்ச் ஆனார்.

அவரைத் தொடர்ந்து பாண்ட்யாவும் அறிமுக வீரராக களமிறங்கிய ரிஷப் பன்டும் ஆடினர். ரிஷப், வந்ததுமே ரஷித் பந்தில் அதிரடியாக ஒரு சிக்சர் அடித்து மிரட்டினார். எந்த வித பதட்டமும் இல்லாமல் அவர் ஆடிய விதம் சிறப்பாக இருந்தது. இந்நிலையில் பாண்ட்யா 18 ரன்களில் வெளியேற நேற்றைய ஆட்டம் முடிவுக்கு வந்தது.

இந்நிலையில், 2ம் நாள் ஆட்டம் இன்று தொடங்கியது. பன்ட், அஸ்வின் களமிறங்கினர். அஸ்வின் பவுண்டரிகளாக அடிக்க மேற்கொண்டு இரண்டு 2 ரன்கள் மட்டும் அடித்து 24 ரன்னில் ஆட்டமிழந்தார் பன்ட். அதன்பின்னர் விக்கெட்கள் அடுத்தடுத்து சரிந்தன. இந்திய அணி 2ம் நாளில் மேற்கொண்டு 22 ரன்கள் சேர்ப்பதற்குள் மீதமுள்ள 4 விக்கெட்களையும் இழந்தது.

அஸ்வின் (14), சமி (3), பும்ரா (0) என அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். இஷாந்த் சர்மா 1 ரன்னில் ஆட்டமிழக்காமல் இருந்தார். இங்கிலாந்து அணியில் வோக்ஸ், பிராட், ஆண்டர்சன் தலா 3 விக்கெட்களை சாய்த்தனர். இதனையடுத்து, இங்கிலாந்து அணி தனது முதல் இன்னிங்சை விளையாடி வருகிறது.


கேப்டன் விராட் கோலியும், ரகானேவும் நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்திய போது இந்திய அணி 241 ரன்களுக்கு 3 விக்கெட்களை மட்டுமே இழந்து இருந்தது. அவர்கள் ஆட்டமிழந்த பிறகு மேற்கொண்டு 100 ரன்கள் கூட அடிக்க முடியாமல் 329 ரன்களுக்கு ஆட்டமிழந்துள்ளது. 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com