சென்னையில் 2 ஆவது டெஸ்ட் போட்டி: நாளை முதல் டிக்கெட் முன்பதிவு!

சென்னையில் 2 ஆவது டெஸ்ட் போட்டி: நாளை முதல் டிக்கெட் முன்பதிவு!

சென்னையில் 2 ஆவது டெஸ்ட் போட்டி: நாளை முதல் டிக்கெட் முன்பதிவு!
Published on

சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையே நடைபெற இருக்கும் இரண்டாவது டெஸ்ட் போட்டிக்கான டிக்கெட் விற்பனை நாளை தொடங்க இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இப்போது முதல் டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது. கொரோனா விதிமுறைகள் காரணமாக முதல் டெஸ்ட் போட்டியை காண ரசிகர்களுக்கு அனுமதி வழங்கப்படவில்லை. ஆனால் மத்திய அரசின் பொது முடக்கத்தில் சில தளர்வுகள் அறிவிக்கப்பட்டு, சென்னையில் பிப்ரவரி 13 முதல் 17 ஆம் தேதி வரை நடைபெற இருக்கும் இரண்டாவது டெஸ்ட் போட்டியில் ரசிகர்கள் அனுமதிக்கப்படுகிறார்கள்.

இதனையடுத்து இந்தப் போட்டிக்கனா டிக்கெட் விற்பனை பிப்ரவரி 8 ஆம் தேதி காலை 10 மணிக்கு இணையதளத்தில் தொடங்குகிறது. ரசிகர்கள் போட்டிக்கான டிக்கெட்டுகளை www.paytm.com மற்றும் www.insider.in என்ற இணையதளத்தில் சென்று முன்பதிவு செய்யலாம். கவுண்ட்டர்களில் டிக்கெட் விற்பனை கிடையாது. 5 நாள் டெஸ்ட் போட்டிக்கான டிக்கெட், நாள் ஒன்றுக்கு ரூ.100, ரூ.150, ரூ.200 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஆன்லைனில் பெறப்படும் ரசீதைக் கொண்டு 11 ஆம் தேதி விக்டோரியா ஹாஸ்டல் சாலையில் இருக்கும் பூத்தில் போட்டிக்கான டிக்கெட்டுகளை பெறலாம்.

இந்தச் சேவை பிப்ரவரி 11 ஆம் தேதி காலை 10 மணி முதல் இருக்கும். மைதானத்தில் போட்டியை காண வரும் ரசிகர்கள் தனி மனித இடைவெளி மற்றும் முகக்கவசம் கட்டாயம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com