‘குக்’கை கிளீன் போல்ட் ஆக்கிய அஸ்வின் - வீடியோ
இந்திய அணியுடனான முதல் டெஸ்ட் கிரிக்கெட்டில், இங்கிலாந்து அணி உணவு இடைவேளையின் போது ஒரு விக்கெட் இழப்புக்கு 83 ரன்கள் எடுத்திருந்தது.
இந்திய கிரிக்கெட் அணி, இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இதில் டி20 தொடரை இந்தியாவும், ஒருநாள் தொடரை இங்கிலாந்தும் கைப்பற்றியது. இந்நிலையில் இவ்விரு அணிகள் மோதும் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் இன்று தொடங்கியது.
பர்மிங்ஹாம் நகரில் நடைபெறும் போட்டியில், டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. இந்திய அணியில் புஜாராவுக்கு பதிலாக கே.எல். ராகுல் சேர்க்கப்பட்டிருந்தார். இங்கிலாந்து அணியில் அனுபவ வீரர் அலெக்ஸ்டர் குக் உடன் , இளம் வீரர் கீட்டன் ஜென்னிங்ஸ் தொடக்க வீரராக களமிறங்கினார். குக் 13 ரன்கள் எடுத்திருந்த போது, அஷ்வினின் பந்துவீச்சில் கிளீன் போல்டாகி விக்கெட்டை இழந்தார்.
இதன்பின்னர் ஜென்னிங்ஸ்-க்கும், கேப்டன் ஜோ ரூட்டும் நிதானமான ஆட்டத்தைத் தொடர்ந்தனர். இங்கிலாந்து அணி உணவு இடைவேளையின் போது ஒரு விக்கெட் இழப்புக்கு 83 ரன்கள் எடுத்திருந்தது. ஜென்னிங்ஸ் 38 ரன்களுடனும், ரூட் 31 ரன்களுடனும் களத்தில் இருந்தனர்.
உணவு இடைவேளைக்கு பின்னர் முகமது ஷமி வேகத்தில் ஜென்னிங்ஸ்(42), மாலன் (8) ரன்னில் ஆட்டமிழந்தனர். 41 ஓவர்கள் முடிவில் இங்கிலாந்து அணி 3 விக்கெட் இழப்புக்கு 120 ரன்கள் எடுத்தது.