வெற்றி பாதைக்கு திரும்புமா இந்தியா

வெற்றி பாதைக்கு திரும்புமா இந்தியா

வெற்றி பாதைக்கு திரும்புமா இந்தியா
Published on

இந்தியா, இலங்கை மற்றும் வங்கதேசம் இடையிலான முத்தரப்பு டி20 கிரிக்கெட் இலங்கையில் நடைபெற்று வருகிறது. இந்தியா-இலங்கை மோதிய முதல் போட்டியில் இலங்கை 5 விக்கெட் வித்தியாசதில் அபார வெற்றி பெற்றது.
இந்நிலையில் இரண்டாவது போட்டி இன்று இந்தியா-வங்கதேசம் இடையில் நடைபெற இருக்கிறது . தொடக்க ஆட்டகாரர் ரோகித் ஷர்மா தொடர்ந்து தடுமாறிவரும் நிலையில் ,தென்னாப்ரிக்கா அணிக்கு எதிராக சிறப்பான ஆட்டத்தை வெளிபடுத்திய ரெய்னாவும் முதல் போட்டியில் ஏமாற்றினார். இருப்பினும் இன்னொரு தொடக்க ஆட்டகாரர் தவான் பேட்டிங்கில் அசத்தி வருகிறார். முதல் போட்டியில் தோற்றதால் நெருக்கடியில் இருக்கும் இந்தியா அணியை வெற்றிபாதைக்கு அழைத்து செல்லவேண்டிய கூடுதல் பொறுப்புடன் ரோகித் ஷர்மாவும், அணி வீரர்களும் செயல்படுவார்கள் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. சமீப காலங்களில் வங்கதேசமும் சிறப்பாக விளையாடி வருவதால் இன்றைய போட்டி மிகவும் விறுவிறுப்பாக இருக்கும் என்றும் கிரிக்கெட் ரசிகர்கள் எதிர்பார்க்கிறார்கள்.இந்தப் போட்டி இந்திய நேரப்படி இரவு 7 மணிக்கு தொடங்க இருக்கிறது.      

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com