பங்களாதேஷை ஊதித் தள்ளியது இந்தியா - அபார வெற்றி

பங்களாதேஷை ஊதித் தள்ளியது இந்தியா - அபார வெற்றி

பங்களாதேஷை ஊதித் தள்ளியது இந்தியா - அபார வெற்றி
Published on

பங்களாதேஷ் அணிக்கு எதிரான 2வது டி20 போட்டியில் இந்திய அணி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

இந்தியா மற்றும் பங்களாதேஷ் இடையேயான 2வது டி20 போட்டி இன்று ராஜ்கோட் மைதானத்தில் நடைபெற்றது. இந்தப் போட்டியில் இந்திய அணி டாஸ் வென்று, முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. இதனால் பங்களாதேஷ் அணி முதலில் பேட்டிங் செய்தது. 29 (21) ரன்கள் எடுத்திருந்த நிலையில், லிடான் தாஸ் ரன் அவுட் ஆனார். முகமது நைம் 36 (31) ரன்களில் விக்கெட்டை பறிகொடுத்தார். 

பின்னர் வந்த சவுமியா சர்கார் மற்றும் முகமதுல்லா ஆகியோர் தலா 30 ரன்களை எடுக்க, 20 ஓவர்கள் முடிவில் பங்களாதேஷ் அணி 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 153 ரன்கள் சேர்த்தது. இந்திய அணியில் சுழற்பந்து வீச்சாளர் சாஹல் 2 விக்கெட்டுகளை சாய்த்தார்.

இதையடுத்து பேட்டிங் செய்த இந்திய அணியில் தொடக்க வீரர்களான ரோகித் ஷர்மா மற்றும் ஷிகர் தவான் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினர் முதல் போட்டியில் அடைந்த தோல்வியின் கோபம் ரோகித் ஷர்மாவின் பேட்டிங்கில் தெரிந்தது. ரசிகர்களை உற்சாகப்படுத்த வான வேடிக்கை காட்டிய அவர், 23 பந்துகளில் அரை சதம் அடித்தார். 31 (27) ரன்களில் தவான் ஆட்டமிழக்க, 43 ரன்களுக்கு 85 ரன்கள் விளாசிய ரோகித் ஷர்மாவும் விக்கெட்டை இழந்தார். பின்னர் வந்த கே.எல்.ராகுல் மற்றும் ஸ்ரேயாஸ் ஐயர் எளிதாக பேட்டிங் செய்து 15.4 ஓவர்களில் இலக்கை எட்டினர். இதனால் இந்தியா 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com