\
2வது டி20 போட்டி - இந்தியாவுக்கு 154 ரன்கள் இலக்கு

2வது டி20 போட்டி - இந்தியாவுக்கு 154 ரன்கள் இலக்கு

2வது டி20 போட்டி - இந்தியாவுக்கு 154 ரன்கள் இலக்கு
Published on

இந்தியாவிற்கு எதிரான 2-வது டி20 போட்டியில் பங்களாதேஷ் அணி 153 ரன்கள் சேர்த்துள்ளது.

இந்தியா மற்றும் பங்களாதேஷ் இடையேயான 2வது டி20 போட்டி இன்று ராஜ்கோட் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டியில் இந்திய அணி டாஸ் வென்று, முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. இதனால் பங்களாதேஷ் அணி முதலில் பேட்டிங் செய்தது. அந்த அணியின் தொடக்க வீரர்களான லிடான் தாஸ் மற்றும் முகமது நைம் ஆகியோர் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார். 29 (21) ரன்கள் எடுத்திருந்த நிலையில், லிடான் தாஸ் ரன் அவுட் ஆனார்.

இதைத்தொடர்ந்து முகமது நைம் 36 (31) ரன்களில் விக்கெட்டை பறிகொடுத்தார். பின்னர் வந்த சவுமியா சர்கார் மற்றும் முகமதுல்லா ஆகியோர் தலா 30 ரன்களை எடுத்தனர். 20 ஓவர்கள் முடிவில் பங்களாதேஷ் அணி 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 153 ரன்கள் சேர்த்தது. இந்திய அணியில் சுழற்பந்து வீச்சாளர் சாஹல் 2 விக்கெட்டுகளை சாய்த்தார்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com