இந்தியா VS ஆஸ்திரேலியா : ‘பாக்சிங் டே’ டெஸ்ட்டில் பார்வையாளர்களுக்கு அனுமதி?
இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு நான்கு டெஸ்ட், மூன்று ஒருநாள் மற்றும் மூன்று டி20 போட்டிகளில் விளையாட உள்ளது.
அண்மையில் பிசிசிஐ இந்த தொடரில் இந்தியாவுக்காக விளையாடவுள்ள வீரர்களின் பெயரை அறிவித்தது.
அதில் மெல்பேர்ன் கிரிக்கெட் மைதானத்தில் பாக்சிங் டே டெஸ்டில் இரு அணிகளும் விளையாடவுள்ளன. இந்த டெஸ்ட் போட்டியை காண சுமார் 25000 பார்வையாளர்களை அனுமதிக்க ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் முடிவு செய்துள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.
அதற்காக அரசு மற்றும் மெல்பேர்ன் கிரிக்கெட் மைதான பிரதிநிதிகளுடன் கிரிக்கெட் வாரியம் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளது.
கொரோனா அச்சுறுத்தலை கருத்தில் கொண்டு தகுந்த பாதுகாப்பு நடவடிக்கைகளை கையாண்டு பார்வையாளர்கள் அனுமதிக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஒரே நேரத்தில் சுமார் 100024 பேர் மெல்பேர்னில் கிரிக்கெட் போட்டிகளை பார்க்கலாம் என்பதும் குறிப்பிடத்தக்கது.