விசாகப்பட்டினத்தில் இன்று இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என்று வானிலை அறிக்கை கூறுகின்றன. இதனால் இன்றைய ஆட்டம் மழையால் பாதிக்க வாய்ப்பு உள்ளது.
இந்தியா வந்துள்ள ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி டெஸ்ட் தொடரை 1-2 என்ற கணக்கில் தோற்றது. இதைத்தொடர்ந்து 3 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. இதில் மும்பையில் நடந்த முதலாவது ஒருநாள் போட்டியில் இந்திய அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. இந்த நிலையில் இந்தியா-ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான 2-வது ஒருநாள் போட்டி பகலிரவு ஆட்டமாக ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் உள்ள ஒய்.எஸ்.ராஜசேகர ரெட்டி கிரிக்கெட் ஸ்டேடியத்தில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) பிற்பகல் 1.30 மணிக்கு தொடங்குகிறது.
இந்நிலையில் விசாகப்பட்டினத்தில் இன்று இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என்று வானிலை அறிக்கை கூறுகின்றன. இதனால் இந்த ஆட்டம் மழையால் பாதிக்க வாய்ப்பு இருக்கிறது. விசாகப்பட்டினத்தில் ஏற்கனவே நேற்று (சனிக்கிழமை) பரவலாக மழை பெய்திருக்கிறது. இதன் காரணமாக போட்டி நடைபெறுவதில் சிக்கல் ஏற்பட்டிருக்கிறது.
இதுகுறித்து தகவல் தெரிவித்துள்ள விசாகப்பட்டினம் கிரிக்கெட் வாரிய நிர்வாகிகள், ''மைதானத்தில் மழைநீரை வெளியேற்றுவதற்கு சிறந்த வசதி ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளது. மழை நின்ற ஒரு மணி நேரத்திலேயே போட்டி தொடங்குவதற்கு அனைத்து ஏற்பாடுகளையும் செய்து இருக்கிறோம். இதனால் மழையால் மைதானம் பாதிக்கப்பட வாய்ப்பு இல்லை. எனினும் மழை நின்றால் மட்டுமே எங்களால் போட்டியை தொடங்க முடியும்'' என்று கூறியிருக்கிறார்கள். இதனால் இன்றைய ஒரு நாள் போட்டி பெரும்பாலும் 50 ஒவர் போட்டியாக நடைபெறாது என எதிர்பார்க்கப்படுகிறது.