இந்திய மண்ணில் மீண்டும் வெல்லுமா ஆஸ்திரேலியா?
2004-ல் இந்தியாவில் நடைபெற்ற டெஸ்ட் தொடரை 2-1 என்ற கணக்கில் ஆஸ்திரேலியா அணி வென்றது. அதன் பிறகு 13 வருடங்களாக இந்திய மண்ணில் நடந்த டெஸ்ட் தொடர்கள் எதையும் ஆஸ்திரேலியா அணி கைப்பற்றவில்லை.
இந்நிலையில், இந்தியா ஆஸ்திரேலியாவிற்கு எதிராக விளையாடும் நான்கு போட்டிகளை கொண்ட பார்டர்-கவாஸ்கர் கோப்பைக்கான டெஸ்ட் தொடர் நாளை ( புனேவில் தொடங்கவுள்ளது. புனேவில் உள்ள மகாராஷ்டிரா கிரிக்கெட் சங்க மைதானத்தில் நடைபெறும் முதல் டெஸ்ட் போட்டி இது.
சொந்த மண்ணில் நியூசிலாந்து மற்றும் இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடர்களில் பெற்ற வெற்றிக்கு பிறகு, ஆஸ்திரேலியாவையும் வீழ்த்தும் முனைப்போடு இருக்கிறது விராட் கோலி தலைமையிலான இந்திய அணி.
இந்தியாவின் மைதானங்கள் சுழற்பந்து வீச்சுக்கு சாதகமாக இருக்கும் என்பதால் ஆஸ்திரேலிய அணியில் 4 சுழற்பந்து வீச்சாளர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
முதல் டெஸ்ட் போட்டி நாளை காலை 9 மணிக்கு தொடங்கும். ஸ்டார் ஸ்போர்ட்ஸ் 1 மற்றும் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் 3 ஆகிய சேனல்களில் போட்டி நேரடியாக ஒளிபரப்பப்படும். இந்த போட்டியை hotstar.com-ல்லும் பார்க்கலாம்.
இந்திய அணி விபரம்: விராத் கோலி, முரளி விஜய், லோகேஷ் ராகுல், புஜாரா, ரஹானே, ரித்திமான் சாஹா, அஸ்வின், ரவீந்திர ஜடேஜா, இஷாந்த் சர்மா, புவனேஷ்வர் குமார், உமேஷ் யாதவ், கருண் நாயர், ஜெயந்த் யாதவ், குல்தீப் யாதவ், அபினவ் முகுந்த், ஹர்திக் பாண்டியா
ஆஸ்திரேலியா அணி விபரம்: ஸ்டீவ் ஸ்மித் (கேப்டன்), டேவிட் வார்னர், ஆஷ்டன் அகர், ஜாக்சன் பேர்ட், பீட்டர் ஹேண்ட்ஸ்காம்ப், ஜோஷ் ஹசல்வுட், உஸ்மான் கவாஜா, நாதன் லியான், மிட்செல் மார்ஷ், ஷான் மார்ஷ், கிளென் மேக்ஸ்வெல், ஸ்டீவ் ஓ கஃபே, மத்தேயு ரென்ஷா, மிட்செல் ஸ்டார்க், மிட்செல் ஸ்வெப்சன், மேத்யூ வேட்.