ஆஸி முதலில் பேட்டிங் ! சாஹல், ராகுல் அணியிலிருந்து நீக்கம்

ஆஸி முதலில் பேட்டிங் ! சாஹல், ராகுல் அணியிலிருந்து நீக்கம்
ஆஸி முதலில் பேட்டிங் ! சாஹல், ராகுல் அணியிலிருந்து நீக்கம்

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 5 வது ஒரு நாள் போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய முதலில் பேட்டிங் செய்கிறது. 

ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி, இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து கிரிக்கெட் விளையாடி வருகிறது. இரு அணிகளுக்கு இடையிலான 2 போட்டிகள் கொண்ட, டி20 தொடரை ஆஸ்திரேலிய அணி கைப்பற்றியது. இதையடுத்து, 5 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடர் நடந்து வருகிறது. இப்போது இரு அணிகளும் தலா இரண்டு வெற்றிகளை பெற்று சமநிலையில் இருக்கிறது.

பிற்பகல் 1.30 மணிக்கு தொடங்கும் இந்தப் போட்டி டெல்லி பெரோஸ் ஷா கோட்டா மைதானத்தில் நடைபெறவுள்ளது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் ஆருண் ஃபின்ச் முதலில் பேட்டிங் செய்ய இருப்பதாக தெரிவித்தார். இன்றைய லெவனில் ஆஸ்திரேலிய அணியில் மார்ஷ் நீக்கப்பட்டு, மார்கஸ் ஸ்டாய்னிஸ் சேர்க்கப்பட்டுள்ளார். அதேபோல பெஹரன்டாப் நீக்கப்பட்டு நேதன் லயன் சேர்க்கப்பட்டுள்ளார். இந்திய அணியில் சாஹல், ராகுல் நீக்கப்பட்டு சமி, ரவீந்திர ஜடேஜா ஆகியோர் சேர்க்கப்பட்டுள்ளனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com