ஆஸி.க்கு எதிரான முதல் டெஸ்ட்: விக்கெட் சரிந்தாலும் நிதானம் காட்டும் இந்தியா!
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டியில் இந்தியா நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தினாலும், சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை சரிய விடுகிறது.
ஆஸ்திரேலியா சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி 4 டெஸ்ட் போட்டிகளில் விளையாடுகிறது. முதலாவது டெஸ்ட் போட்டி இரவு பகல் ஆட்டமாக அடிலெய்ட் நகரில் நடைபெறுகிறது. டாஸ் வென்ற இந்திய கேப்டன் விராட் கோலி பேட்டிங்கை தேர்வு செய்தார். இதையடுத்து பிரித்திவ் ஷா மற்றும் மயங்க் அகர்வால் ஆகியோர் ஆட்டத்தை தொடர்ந்தனர்.
முதல் ஓவரை சந்தித்த பிரித்திவ் ஷா 2-வது பந்தில் விக்கெட்டை பறிகொடுத்து ஆட்டமிழந்தார். மயங்க் அகர்வால் 17 ரன்களில் பெவிலியன் திரும்பினார்.
இதையடுத்து புஜாராவுடன் ஜோடி சேர்ந்தார் கேப்டன் கோலி. இந்த இணை ஆஸ்திரேலியா பந்துவீச்சாளர்களை சமாளித்து மிக நிதானமாக ரன் குவித்தது. புஜாரா 160 பந்துகளில் 43 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இதனை அடுத்து கோலியுடன் ரகானே ஜோடி சேர்ந்துள்ளார்
சற்று முன்பு வரை 50 ஓவர்களில் இந்திய அணி 3 விக்கெட் இழப்புக்கு 100 ரன்கள் சேர்த்துள்ளது.