5 வது ஒருநாள் போட்டி: ஆஸ்திரேலியா பேட்டிங்

5 வது ஒருநாள் போட்டி: ஆஸ்திரேலியா பேட்டிங்
5 வது ஒருநாள் போட்டி: ஆஸ்திரேலியா பேட்டிங்

இந்தியாவுக்கு எதிரான 5வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டியில், டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது.

இந்தியா-ஆஸ்திரேலியான இடையேயான ஒருநாள் கிரிக்கெட் தொடர் இந்தியாவில் நடைபெற்று வருகிறது. இதில் 3-1 என்ற விகிதத்தில் இந்தியா தொடரை வென்றுள்ளது. தொடரை வென்றதன் மூலம் சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் தரவரிசையில் முதலிடத்தை பிடித்த இந்திய அணி, கடந்த போட்டியில் தோல்வி அடைந்ததால் 2ஆம் இடத்திற்கு தள்ளப்பட்டது. 
இந்நிலையில் 5வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி நாக்பூரில் இன்று தொடங்கியது.  இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது. இந்திய அணியில் கடந்த போட்டியில் ஓய்வு கொடுக்கப்பட்டிருந்த புவனேஷ்வர்குமார், பும்ரா ஆகியோர் சேர்க்கப்பட்டுள்ளனர்.
இந்த போட்டியில் வெற்றி பெற்றால் சர்வதேச ஒரு நாள் தரவரிசையில் மீண்டும் இந்திய அணி முதலிடம் பிடிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com