அஸ்வின் - விஹாரியின் பொறுமை: ட்ராவில் முடிந்த சிட்னி டெஸ்ட்!
சிட்னியில் நடைபெற்ற பரபரப்பான டெஸ்ட் போட்டியை சமநிலையில் முடித்தது இந்தியா
இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான சிட்னி டெஸ்ட் போட்டியில் வெல்ல 407 ரன்களை இலக்காக நிர்ணயித்தது ஆஸ்திரேலியா. இதில் இந்திய அணி போராடி ட்ரா செய்தது. இந்தியா 334 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை எடுத்து ட்ரா செய்துள்ளது.
இந்திய அணியின் விஹாரி, அஸ்வின் ஜோடி அபாரமாக டெஸ்ட் போட்டியை விளையாடியது. குறிப்பாக விஹாரி கொடூர டெஸ்ட் போட்டியை ஆடினார். 161 பந்துகள் சந்தித்த அவர் 23 ரன்கள் எடுத்தார். அஸ்வின் 128 பந்துகளை சந்தித்து 39 ரன்கள் எடுத்தார். அதிகபட்சமாக பண்ட், 118 பந்துகளுக்கு 97 ரன்களை எடுத்து ஆட்டமிழந்தார். ட்ரா செய்துவிட வேண்டுமென்ற எண்ணத்திலேயே இந்தியா ஆடி போட்டியை சமநிலையில் முடித்துள்ளது. ஆஸி பந்துவீச்சை பொருத்தவரை மிட்செல் ஸ்டார்க், கும்மின்ஸ் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை எடுத்தனர்.