3-வது டெஸ்ட் இன்று தொடக்கம்: வெற்றி கட்டாயத்தில் ஆஸி., - தொடரை வெல்லும் முனைப்பில் இந்தியா

3-வது டெஸ்ட் இன்று தொடக்கம்: வெற்றி கட்டாயத்தில் ஆஸி., - தொடரை வெல்லும் முனைப்பில் இந்தியா
3-வது டெஸ்ட் இன்று தொடக்கம்: வெற்றி கட்டாயத்தில் ஆஸி., - தொடரை வெல்லும் முனைப்பில் இந்தியா

ஆஸ்திரேலிய அணி கடந்த 2 டெஸ்டில் தோல்வி அடைந்ததால் கடும் விமர்சனத்துக்கு உள்ளாகி இருக்கிறது.

இந்தியாவுக்கு வருகை தந்துள்ள ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி 4 போட்டிகள் கொண்ட பார்டர்-கவாஸ்கர் கோப்பை டெஸ்ட் தொடரில் பங்கேற்றுள்ளது. இதில் நாக்பூரில் நடந்த முதலாவது டெஸ்டில் இன்னிங்ஸ் மற்றும் 132 ரன் வித்தியாசத்திலும், டெல்லியில் நடந்த 2-வது டெஸ்டில் 6 விக்கெட் வித்தியாசத்திலும் இந்திய அணி ஆஸ்திரேலியாவை தோற்கடித்து தொடரில் 2-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. இந்த நிலையில் இந்தியா- ஆஸ்திரேலியா இடையிலான 3-வது டெஸ்ட் போட்டி மத்தியப் பிரதேசம் மாநிலம் இந்தூரில் உள்ள ஹோல்கர் மைதானத்தில் இன்று (புதன்கிழமை) தொடங்குகிறது. இதையொட்டி கடந்த சில தினங்களாக இரு அணி வீரர்களும் தீவிர பயிற்சியில் ஈடுபட்டனர்.

முன்னிலையில் உள்ள இந்திய அணி தொடரைக் கைப்பற்ற மும்முரம் காட்டி வருகிறது. மூன்றாவது டெஸ்டில் இந்திய அணி வென்றால் கவாஸ்கர் பார்டர் கிரிக்கெட் கோப்பையை மீண்டும் தக்கவைப்பதுடன், உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு தகுதி பெறும். அத்துடன் டெஸ்ட் தரவரிசையில் இந்தியா 'நம்பர் ஒன்' இடத்துக்கு முன்னேறி 3 வடிவிலான போட்டியிலும் ஒரே சமயத்தில் 'நம்பர் ஒன்' அந்தஸ்தை எட்டிய முதல் அணி என்ற பெருமையை பெறும். 

எனவே வெற்றியை பதிவு செய்ய இந்திய வீரர்கள் ஆயத்தமாகி வருகின்றனர். அதே வேளையில் தொடர் தோல்வியிலிருந்து மீள்வதுடன் நடப்பு தொடரையும் மோசமாக இழக்காமல் இருக்க ஆஸ்திரேலிய அணியினரும் தயாராகி வருகின்றனர். இதனால் இந்தூர் டெஸ்ட் போட்டி இந்திய அணிக்கு முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளது. 

இந்திய அணியில் பெரிய அளவில் மாற்றங்கள் இருக்க வாய்ப்பு இல்லை. ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் பேட் கம்மின்ஸ், சொந்த காரணங்களுக்காக தாயகம் சென்றுள்ளார். இதனால் 3-வது டெஸ்டில் இருந்து அவர் விலகி உள்ளார். அவருக்கு பதிலாக ஸ்டீவ் ஸ்மித் கேப்டனாக செயல்படுவார். அதேபோல் காயம் அடைந்த தொடக்க வீரர் டேவிட் வார்னரும் விலகி உள்ளார். அவர்களின் விலகல் ஆஸ்திரேலியாவுக்கு பின்னடைவாக கருதப்படுகிறது. 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com