மர்ஃபி சுழலில் திணறும் சிக்கித் தடுமாறும் இந்தியா - மீட்கும் முயற்சியில் ரோகித் சர்மா

மர்ஃபி சுழலில் திணறும் சிக்கித் தடுமாறும் இந்தியா - மீட்கும் முயற்சியில் ரோகித் சர்மா
மர்ஃபி சுழலில் திணறும் சிக்கித் தடுமாறும் இந்தியா - மீட்கும் முயற்சியில் ரோகித் சர்மா

இரண்டாவது நாள் ஆட்டத்தின் மதிய உணவு இடைவேளை வரை, இந்திய அணி 3 விக்கெட்டுகளை இழந்து 151 ரன்களை சேர்த்துள்ளது.

இந்தியா – ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணிகளுக்கு இடையிலான பார்டர்-கவாஸ்கர் டிராபியின் முதல் டெஸ்ட் போட்டி நாக்பூரில் நேற்று தொடங்கியது. இந்த ஆட்டத்தில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணி, முதல் இன்னிங்சிஸ் முடிவில் 63.5 ஓவர்களில் 177 ரன்கள் எடுத்து ஆல்-அவுட் ஆனது.

இந்திய அணியில் மிகச்சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்திய ரவீந்திர ஜடேஜா 5 விக்கெட்டுகளையும், அஸ்வின் 3 விக்கெட்டுகளையும், ஷமி, சிராஜ் தலா ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர். இதனைத் தொடர்ந்து முதல் இன்னிங்சில் பேட்டிங் செய்த இந்திய அணி முதல் நாள் ஆட்ட நேர முடிவில் ஒரு விக்கெட் இழப்பிற்கு 77 ரன்கள் எடுத்தது.

இந்நிலையில், இன்று 2ம் நாள் ஆட்டத்தை விளையாட தொடங்கியது இந்திய அணி. ஆஸ்திரேலிய அணியின் இளம் சுழற்பந்து வீச்சாளர் மர்பி, தனது முதல் போட்டியிலேயே அடுத்தடுத்து இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தி அதிர்ச்சிக்குள்ளாக்கினார். ஆர் அஸ்வின் 23 ரன்னில் எல்.பி.டபிள்யூ. ஆகி நடையைக் கட்டினார். பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட சேதேஷ்வர் புஜாரா 7 ரன்னில் ஆட்டமிழந்து வெளியேறினார். இரண்டாவது நாள் ஆட்டத்தின் மதிய உணவு இடைவேளை வரை, இந்திய அணி 3 விக்கெட்டுகளை இழந்து 151 ரன்களை சேர்த்துள்ளது. கேப்டன் ரோகித் சர்மா 85 ரன்களுடனும் விராட் கோலி (12) ரன்களுடனும் களத்தில் உள்ளனர். ஆஸ்திரேலியாவை விட இந்திய அணி தற்போது 26 ரன்கள் பின்தங்கியுள்ளது

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com