சதமடித்தார் ஸ்டீவ் ஸ்மித்

சதமடித்தார் ஸ்டீவ் ஸ்மித்

சதமடித்தார் ஸ்டீவ் ஸ்மித்
Published on

இந்தியாவிற்கு எதிரான நான்காவது டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் சதமடித்தார். இவர் 151 பந்துகளில் 101 ரன்களை குவித்தார்.

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியாவிற்கு எதிரான நான்காவது டெஸ்ட் போட்டி தர்மசாலாவில் இன்று தொடங்கியது. இரண்டு அணிகளும் ஒரு போட்டியை ஜெயித்துள்ளதால் 1-1 என்று சமநிலையில் இருக்கும் தொடரை யார் வெல்ல போவது என்பதை தீர்மானிக்கும் முக்கிய டெஸ்ட் இது.

இந்த தொடரில் சிறப்பான ஆட்டத்தை தொடர்ந்து வெளிப்படுத்திய ஸ்டீவ் ஸ்மிதிற்கு இது மூன்றாவது சதம். டெஸ்ட் போட்டிகளில் இதுவரை 20 சதங்களை குவித்துள்ளார் ஸ்மித். இதில் 7 சதங்கள் இந்தியாவிற்கு எதிரானது என்பது குறிப்பிடத்தக்கது.

ஆஸ்திரேலிய அணி 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 190 ரன்கள் எடுத்து விளையாடி வருகிறது. இந்திய அணி சார்பில், உமேஷ் யாதவ் 2 விக்கெட்டுகளும், இளம் வீரர் குல்தீப் யாதவ் 3 விக்கெட்டுகளும் விழ்த்தினர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com