2வது ஒருநாள் போட்டி - டாஸ் வென்ற ஆஸ்திரேலியா பேட்டிங் தேர்வு

2வது ஒருநாள் போட்டி - டாஸ் வென்ற ஆஸ்திரேலியா பேட்டிங் தேர்வு
2வது ஒருநாள் போட்டி - டாஸ் வென்ற ஆஸ்திரேலியா பேட்டிங் தேர்வு

இந்திய அணிக்கு எதிரான 2வது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் ஆஸ்திரேலிய அணி பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது.

ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் இந்திய கிரிக்கெட் அணி விளையாடி வருகிறது. முதல் ஒருநாள் சிட்னியில் நடைபெற்றது. இந்த போட்டியில் இந்திய அணி 34 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவியதால், இந்திய அணி இந்த தொடரில் 0-1 என்ற கணக்கில் பின் தங்கியுள்ளது.

இரு அணிகளுக்கு இடையேயான 2வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி இன்று அடிலெய்ட்டில் நடைபெறுகிறது. இப்போட்டியில் கட்டாயம் வெற்றி பெற வேண்டும் என்ற நிலையில் இந்திய அணி உள்ளது. 

இந்நிலையில், 2 ஆவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி கேப்டன் ஆரோன் ஃபின்ச் பேட்டிங்கை தேர்வு செய்தார். இந்திய அணியில் கலீல் அகமதுவுக்கு பதிலாக முகமது சிராஜ் சேர்க்கப்பட்டுள்ளார். இந்தப் போட்டி முகமது சிராஜுக்கு முதல் ஒருநாள் போட்டி ஆகும்.

இதையடுத்து களமிறங்கிய ஆஸ்திரேலிய அணி ஒரு ஓவருக்கு 3 ரன்கள் எடுத்துள்ளது. தொடக்க ஆட்டகாரர்களாக அலெக்ஸ் கேரேவும், கேப்டன் ஆரோன் ஃபின்ச்சும் களமிறங்கியுள்ளனர். பந்து வீச்சில் இந்திய அணியில் முதல் ஓவரை புவனேஷ்குமார் வீசியுள்ளார்.

கடந்த போட்டியிலும் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் ஆரோன் ஃபின்ச் பேட்டிங்கை தேர்வு செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com