விளையாட்டு
பெங்களூர் டெஸ்ட்: முன்னிலை பெற்றது ஆஸ்திரேலியா
பெங்களூர் டெஸ்ட்: முன்னிலை பெற்றது ஆஸ்திரேலியா
பெங்களூருவில் நடைபெற்று வரும் இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இரண்டாம் நாள் ஆட்ட முடிவில் ஆஸ்திரேலிய அணி தனது முதல் இன்னிங்சில் ஆறு விக்கெட் இழப்பிற்கு 237 ரன்கள் எடுத்துள்ளது.
விக்கெட் இழப்பின்றி 40 ரன்கள் எடுத்திருந்த நிலையில் இரண்டாம் நாள் ஆட்டத்தைத் தொடங்கிய ஆஸ்திரேலிய அணியின் தொடக்க வீரர் ரென்ஷா 60 ரன்களை எடுத்தார். மத்திய வரிசை ஆட்டக்காரர் ஷான் மார்ஷ் அரை சதம் கடந்தார். ஆட்ட நேர முடிவில் மேத்யூ வேட் 25 ரன்களுடனும், மிட்செல் ஸ்டார்க் 14 ரன்களுடனும் களத்தில் உள்ளனர். இந்தியா தரப்பில் ரவிந்திர ஜடேஜா மூன்று விக்கெட்டுகளையும், அஸ்வின், இஷாந்த் சர்மா, உமேஷ் யாதவ் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர்.