இந்திய அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்ஸில் 260 ரன்களில் ஆல் அவுட் ஆனது.
இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி புனேவில் நேற்று தொடங்கியது. டாஸ் வென்று பேட்டிங்கை தேர்வு செய்து விளையாடிய ஆஸ்திரேலிய அணி வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். இறுதியில் முதல்நாள் ஆட்டநேர முடிவில் ஆஸ்திரேலியா 9 விக்கெட் இழப்பிற்கு 256 ரன்கள் எடுத்துள்ளது.
இதையடுத்து 2வது நாள் ஆட்டத்தை தொடங்கி ஆடிய ஆஸ்திரேலியா முதல் இன்னிங்ஸில் 260 ரன்களில் ஆல் அவுட் ஆனது. ஆஸ்திரேலிய அணியில் சார்பாக அதிகபட்சமாக ரென்ஷா 68 ரன்களும் ஸ்டார்க் 61 ரன்களும் எடுத்தனர். இந்திய அணியில் உமேஷ் யாதவ் 4 விக்கெட், அஸ்வின் 3 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.