இந்தியா-ஆஸ்திரேலியா இறுதிப் போட்டி : மிரட்டும் மெல்போர்ன்..! மிரள்வது யார்..?

இந்தியா-ஆஸ்திரேலியா இறுதிப் போட்டி : மிரட்டும் மெல்போர்ன்..! மிரள்வது யார்..?
இந்தியா-ஆஸ்திரேலியா இறுதிப் போட்டி : மிரட்டும் மெல்போர்ன்..! மிரள்வது யார்..?

இந்தியா-ஆஸ்திரேலியா இடையேயான இறுதி ஒருநாள் போட்டி நாளை மெர்ல்போர்ன் மைதானத்தில் நடைபெறுகிறது.

இந்தியா-ஆஸ்திரேலியா இடையேயா இறுதி மற்றும் மூன்றாவது ஒருநாள் போட்டி நாளை நடைபெறுகிறது. இந்தப் போட்டியில் வெற்றி அணிக்கு ஒருநாள் தொடர் கோப்பை கிடைக்கும் என்பதால், இரு அணிகளும் பலத்த பயிற்சியில் ஈடுபட்டுள்ளன. ஆனால் போட்டி நடக்கும் மைதானம் மெல்போர்ன் என்பதால், நாம் அது ஆராய வேண்டியது சற்று அவசியமாகிறது.

இந்தச் சுற்றுப்பயணத்தில் மெர்ல்போனில் நடைபெற்ற 2வது டி20 மற்றும் 3வது டெஸ்ட் போட்டி ஆகிய இரண்டு போட்டிகளில், டி20 மழையால் ரத்தானது. மற்றும் டெஸ்ட் போட்டில் இந்தியா வென்றது. ஆனால் டெஸ்ட்டில் வென்றது போல ஒருநாள் போட்டியில் இந்தியா வெல்லுமா ? என்றால் அது கேள்விக்குறிதான். ஏனென்றால் போட்டிகளுக்கு ஏற்றாற்போல, மைதானம் தயார்ப்படுத்தப்படும். நாளை போட்டியில் கிரிக்கெட் வல்லுநர்களின் கணிப்புப்படி முதலில் பேட்டிங் செய்பவர்களுக்கு வெற்றி வாய்ப்பு அதிகம் எனக் கணிக்கப்பட்டுள்ளது. 

இதுவரை மெல்போர்ன் : 

மெல்போர்ன் மைதானத்தில் கிரிக்கெட் விளையாட ஆரம்பித்ததில் இருந்து இதுவரை அங்கு 148 ஒருநாள் போட்டிகள் நடைபெற்றுள்ளன. இதில் 74 போட்டிகளில் ஆஸ்திரேலியா வென்றுள்ளது. 45 போட்டிகளை வெளிநாடுகள் வென்றுள்ளன. 3 போட்டிகள் மழை உள்ளிட்ட காரணங்களால் ரத்து செய்யப்பட்டுள்ளன. ஒரு போட்டி சமனில் முடிந்துள்ளது. இந்தியா-ஆஸ்திரேலியா இடையே போட்டிகளை கணக்கிட்டால், மொத்தம் 14 ஒருநாள் போட்டிகள் நடைபெற்றுள்ளது. இதில் 6 போட்டிகளில் இந்தியா வென்றுள்ளது. 9 போட்டிகளில் ஆஸ்திரேலியா வென்றுள்ளது. இதில் 6 முறை முதலில் பேட்டிங் செய்த அணி வென்றுள்ளது. 9 முறை இரண்டாவது பேட்டிங் செய்த அணி வென்றுள்ளது. 

இருப்பினும் நாளை முதலில் பேட்டிங் செய்யும் அணி வெல்லும் என்று கணிப்பிற்கு காரணமாக தற்போது உள்ள அணிகளின் நிலைகளைக் கொண்டும், மைதானம் அமைக்கப்படும் முறையைக் கொண்டும் கணிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக மைதானம் பந்துவீச்சாளர்களுக்கு ஆதரவாக மைதானம் அமைக்கப்பட்டிருப்பதாகவும் கூறப்படுகிறது.

இந்திய அணியில் பும்ரா இல்லாததை கருத்தில் கொண்டு இவ்வாறு அமைக்கப்பட்டிருக்கலாம். அத்துடன் இந்தியா 2வது பேட்டிங் செய்தால், தொடக்க ஆட்டக்காரர்களின் பலத்தால் இலக்கு எளிதாகும். எனவே அவர்களை கட்டுப்படுத்தும் வகையில் மைதானம் அமைக்கப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது. அதேசமயம் ஆஸ்திரேலிய அணியின் பேட்ஸ்மேன்களுக்கு அது பழக்கப்பட்ட களம் என்பதால், இந்திய பந்துவீச்சாளர்கள் திறம்பட செயல்பட வேண்டும் எனப்படுகிறது. 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com