‘தோனியை நீக்காமல் தொடர்ந்து ஆதரவு அளித்தவர் கோலி’ கங்குலி பாராட்டு

‘தோனியை நீக்காமல் தொடர்ந்து ஆதரவு அளித்தவர் கோலி’ கங்குலி பாராட்டு

‘தோனியை நீக்காமல் தொடர்ந்து ஆதரவு அளித்தவர் கோலி’ கங்குலி பாராட்டு
Published on

மகேந்திர சிங் தோனியை 15-16 மாதங்கள் அணியில் நீடிக்க வைத்தவர் கேப்டன் விராட் கோலி என்று முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி பாராட்டியுள்ளார்.

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரில் தொடர்ந்து மூன்று போட்டிகளில் அரைசதம் அடித்து தோனி அசத்தியுள்ளார். அணியின் வெற்றிக்கும், தொடரை வெல்வதற்கும் காரணமாக இருந்த தோனி, தொடர் நாயகன் விருதினையும் தட்டிச் சென்றார். 2018ம் ஆண்டில் மிகவும் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி இருந்த நிலையில், இந்த வருடம் அவருக்கு நல்ல தொடக்கமாக அமைந்துள்ளது. 

2018ம் ஆண்டில் 20 ஒருநாள் போட்டிகளில் விளையாடி வெறும் 275 ரன்கள் மட்டுமே தோனி எடுத்து இருந்தார். 2007இல் அறிமுகமானது முதல் கடந்த ஆண்டுதான் மோசமான சராசரியை அவர் வைத்து இருந்தார். அதனால், கடுமையான விமர்சனங்களை தோனி எதிர்கொண்டார். தோனி ஓய்வு பெற வேண்டும் என்று மூத்த வீரர்கள் பலரும் கூட முன் வைத்தார்கள். இந்த நிலையில், ஆஸ்திரேலிய ஒருநாள் தொடரில் மீண்டும் தனது பழைய பார்முக்கு திரும்பி ஃபெஸ்ட் பினிஷர் என்பதையும் நிரூபித்துவிட்டார். 

இந்நிலையில், தோனியை சுமார் 15 மாதங்கள் அணியில் தக்க வைத்ததற்காக கேப்டன் விராட் கோலியை முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி பாராட்டியுள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், “இரண்டு வீரர்களும் அணியில் நீண்ட நாட்கள் விளையாடியுள்ளனர். தற்போதைக்கு தோனிதான் அணியில் சீனியர். விராட் கோலிக்கும் அவருக்குமான உறவு எல்லோருக்கும் தெரிந்ததுதான். கடந்த ஆண்டு கடும் நெருக்கடியில் தோனி இருந்த போது அவருக்கு கோலி தொடர்ந்து ஆதரவு தெரிவித்து வந்தார். 

ஒரு சில கேப்டன்களே அணியில் சில வீரர்கள் நீண்ட காலம்  தொடர்வதை விரும்புவார்கள். தோனியை நீக்காமல் இருந்ததற்காக விராட் கோலியை பாராட்டுகிறேன். இதுதான் சிறந்த அணியை உருவாக்கும். ஒருவருக்கொரு சரியான மரியாதை கொடுக்கவில்லை என்றால் ஒரு சிறந்த அணி உருவாக முடியாது” என்றார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com