அசத்திய ஆப்கான் - 224 ரன்னில் கட்டுப்பட்ட இந்திய அணி

அசத்திய ஆப்கான் - 224 ரன்னில் கட்டுப்பட்ட இந்திய அணி

அசத்திய ஆப்கான் - 224 ரன்னில் கட்டுப்பட்ட இந்திய அணி
Published on

உலகக் கோப்பை தொடரில் ஆப்கான் அணியில் அபார பந்துவீச்சினால் இந்திய அணி 224 ரன்கள் மட்டுமே எடுத்தது.

இந்தியா ஆப்கானிஸ்தான் இடையிலான போட்டி சவுதம்டன் நகரில் நடைபெற்று வருகிறது. இதில், டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங் செய்த தீர்மானித்தது. தொடக்க ஆட்டக்காரர் ரோகித் சர்மா ஒரு ரன்னில் ஆட்டமிழந்து அதிர்ச்சி அளித்தார். பின்னர், கே.எல்.ராகுல், விராட் கோலி ஜோடி நிதானமாக விளையாடி ரன்களை சேர்ந்தது.

ராகுல் மிகவும் நிதானமாக விளையாடினார். இருப்பினும், 53 பந்துகளில் 30 ரன்கள் எடுத்து அவர் ஆட்டமிழந்தார். சற்று நேரம் தாக்குப்பிடித்த விஜய் சங்கரும் 41 பந்துகளில் 29 ரன் எடுத்து நடையை கட்டினார். விராட் கோலி மட்டும் நேர்த்தியாக விளையாடி அரைசதம் அடித்தார். தோனி மிகவும் நிதானமாக விளையாடினார். சிறப்பாக விளையாடி வந்த கோலி 63 பந்துகளில் 67 ரன்கள் எடுத்து அவுட் ஆனார். 135 ரன்னிற்குள் இந்திய அணி 4 விக்கெட் இழந்தது.

பின்னர், தோனியுடன், கேதர் ஜாதவ் ஜோடி சேர்ந்தார். இருவரும் விக்கெட் வீழ்ச்சியை தடுத்து நிறுத்த நிதான ஆட்டத்தை மேற்கொண்டனர். ஓவர்கள் சென்று கொண்டே இருந்தது ஆனால், ரன் வேகம் மிகவும் குறைவாக இருந்தது. கடைசி 10 ஓவர்களில் இந்த ஜோடி அடித்து விளையாடும் என்று எதிர்பார்க்கப்பட்டது. அப்பொழுதும் இவர்கள் நிதானமாகவே விளையாடினர்.  

ஒரு கட்டத்தில் ரசிகர்கள் மிகுந்த எரிச்சலடைந்தனர். தோனி அடிப்பார் என்று எதிர்பார்த்த நேரத்தில் அவர் 52 பந்துகளில் 28 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். நீண்ட நேரம் காத்திருந்து 45வது ஓவரில் களமிறங்கினார் ஹர்திக் பாண்ட்யா. ஆனால், அவரால் அதிக பந்துகளை சந்திக்கவே முடியவில்லை. அவரும் 9 பந்துகளில் 7 ரன் எடுத்து ஆட்டமிழந்தார். கேதர் நிதானமாக இறுதிவரை விளையாடி 68 பந்துகளில் 52 எடுத்து கடைசி ஓவரில் அவுட் ஆனார். 

இறுதியில், 50 ஓவர் முடிவில் இந்திய அணி 8 விக்கெட் இழப்புக்கு 224 ரன்கள் மட்டுமே எடுத்தது. ஆப்கான் அணியில் நபி, நெய்ப் தலா இரண்டு விக்கெட் எடுத்தனர்.

முஜீப் ரஹ்மான் 10 ஓவர்கள் வீசி 26 ரன்கள் மட்டும் விட்டுக் கொடுத்து ஒரு விக்கெட்டையும் சாய்த்தார். நபி, ரஷித் இருவரும் அசத்தலாக பந்துவீசி ரன்களை கட்டுப்படுத்தினர். 

இங்கிலாந்து அணிக்கு எதிரான ரன்களை வாரி வழங்கிய ஆப்கான் அணி இந்தப் போட்டியில் அபாரமாக பந்துவீசியுள்ளது. கடும் விமர்சனத்திற்குள்ளான ரஷித் கான் இந்தப் போட்டியில் அசத்தினார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com