இந்தியா - இலங்கை கிரிக்கெட் தொடர் : புதிய அட்டவணை வெளியீடு

இந்தியா - இலங்கை கிரிக்கெட் தொடர் : புதிய அட்டவணை வெளியீடு
இந்தியா - இலங்கை கிரிக்கெட் தொடர் : புதிய அட்டவணை வெளியீடு

இந்தியா - இலங்கை கிரிக்கெட் அணிகளுக்கு இடையிலான ஒருநாள் மற்றும் டி20 தொடருக்கான புதிய அட்டவணையை வெளியிட்டுள்ளது இலங்கை கிரிக்கெட். இந்த தொடர் இலங்கையில் நடைபெற உள்ளது. ஜூலை 13 அன்று ஆரம்பமாக வேண்டிய இந்த தொடர் இலங்கை அணி வீரர்கள் மற்றும் நிர்வாகிகள் சிலருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டதால் தொடர் ஒத்திவைக்கப்பட்டது. 

மூன்று ஒருநாள் மற்றும் மூன்று டி20 கிரிக்கெட் போட்டிகள் கொண்ட இந்த தொடர் வரும் 18 ஆம் தேதி தொடங்கி 29 ஆம் தேதி முடிய உள்ளது. ஒருநாள் கிரிக்கெட் போட்டிகள் 3 மணிக்கும், டி20 போட்டிகள் 8 மணிக்கும் ஆரம்பமாகும். 

ஷிகர் தவான் வழிநடத்தும் இந்திய அணியில் ராகுல் டிராவிட் பயிற்சியாளராக பணியாற்ற உள்ளார். 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com