டிஆர்எஸ் சர்ச்சை: ஸ்மித்துக்கு ஆதரவாக ஆஸி. கிரிக்கெட் வாரியம்

டிஆர்எஸ் சர்ச்சை: ஸ்மித்துக்கு ஆதரவாக ஆஸி. கிரிக்கெட் வாரியம்
டிஆர்எஸ் சர்ச்சை: ஸ்மித்துக்கு ஆதரவாக ஆஸி. கிரிக்கெட் வாரியம்

டிஆர்எஸ் சர்ச்சையில் சிக்கிய ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் ஸ்டீவன் ஸ்மித்துக்கு ஆதரவாக அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் குரல் எழுப்பியுள்ளது.

பெங்களூரு டெஸ்டில் உமேஷ் யாதவ் வீசிய பந்துவீச்சில் எல்பிடபிள்யூ முறையில் ஆட்டமிழந்தார் ஸ்மித். டிஆர்எஸ் பயன்படுத்துவது தொடர்பாக பெவிலியனில் இருந்த ஆஸ்திரேலிய வீரர்களிடம் உதவி கேட்டதாக சர்ச்சை எழுந்தது. இந்த குற்றச்சாட்டு குறித்து பதிலளித்த ஸ்மித், அதுபோன்ற செயலில் ஈடுபட்டிருக்கக் கூடாது என்று வருத்தம் தெரிவித்தார். ஆனால், ஸ்மித்தின் கூற்றை ஏற்க மறுத்த இந்திய அணியின் கேப்டன் விராத் கோலி, ஸ்மித் எல்லைமீறி விட்டதாகக் குற்றம்சாட்டினார்.

இந்தநிலையில், ஸ்மித்துக்கு ஆதரவாக ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் குரல் எழுப்பியுள்ளது. இளம் வீரர்களுக்கு சிறந்த முன்னுதாரணமாக விளங்கும் ஸ்மித் மீது குற்றம்சாட்டப்படுவது அபாண்டமானது என்று ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியத்தின் தலைமை செயலதிகாரியான ஜேம்ஸ் சதர்லேண்ட் கூறியுள்ளார். ஸ்மித் மீதான குற்றச்சாட்டை மறுத்துள்ள ஆஸ்திரேலிய அணியின் பயிற்சியாளர் டேரன் லீமேன், அதுபோன்ற சம்பவம் எப்போதும் நடந்ததில்லை என்று பதிலளித்துள்ளார். அதே நேரம், ஸ்மித் மீதான குற்றச்சாட்டு தொடர்பாக, சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் விசாரணை நடத்த வேண்டும் என்று சுனில் கவாஸ்கர் உள்ளிட்ட இந்திய அணியின் முன்னாள் வீரர்கள் வலியுறுத்தி உள்ளனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com