இந்திய கிரிக்கெட் வாரியத் தலைவர் மற்றும் இலங்கை கிரிக்கெட் அணிகள் இடையிலான 2 நாள் பயிற்சிப் போட்டி கொல்கத்தாவில் நாளை தொடங்குகிறது.
தினேஷ் சண்டிமால் தலைமையிலான இலங்கை அணி, மூன்று டெஸ்ட், மூன்று ஒருநாள் போட்டிகள் மற்றும் மூன்று ட்வெண்டி ட்வெண்டி போட்டிகள் கொண்ட தொடரில் இந்திய அணியுடன் விளையாடுகிறது. இதையொட்டி வாரியத் தலைவர் அணியுடன் பயிற்சி ஆட்டத்தில் இலங்கை அணி விளையாடுகிறது.
இலங்கை அணி இந்திய மண்ணில் ஒருமுறை கூட டெஸ்ட் போட்டியில் வென்றதில்லை. இந்த நிலையில் இந்தியா - இலங்கை அணிகள் இடையிலான முதல் டெஸ்ட் போட்டி வரும் கொல்கத்தாவில் வரும் பதினாறாம் தேதி தொடங்குகிறது.