U19 உலக கோப்பை: இந்திய அணி முதல் போட்டியில் வெற்றி

U19 உலக கோப்பை: இந்திய அணி முதல் போட்டியில் வெற்றி

U19 உலக கோப்பை: இந்திய அணி முதல் போட்டியில் வெற்றி
Published on

மேற்கிந்திய தீவுகளில் நடைபெற்று வரும் 19 வயதுக்கு உட்பட்டோருக்கான உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்திய அணி முதல் வெற்றியை பதிவு செய்தது.

நேற்றிரவு ஜார்ஜ்டவுனில் நடைபெற்ற குரூப் பி பிரிவு ஆட்டத்தில் இந்தியா - தென் ஆப்ரிக்கா அணிகள் மோதின. முதலில் விளையாடிய இந்திய அணி 232 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. அதிகபட்சமாக கேப்டன் யாஷ் துல் 82 ரன்கள் எடுத்தார். வெற்றி இலக்கை துரத்திய தென் ஆப்ரிக்கா அணி தொடக்கம் முதலே திணறியது.

அபாரமாக பந்து வீசிய விக்கி OSTWAL 5 விக்கெட்டுகளையும், ராஜ் பவா 4 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர். முடிவில் தென் ஆப்ரிக்கா அணி 187 ரன்களுக்கு ஆல்அவுட்டாகியது. இதன்மூலம் 45 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று முதல் வெற்றியை இந்திய அணி பதிவு செய்தது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com