இந்திய கிரிக்கெட் அணியின் உடற்பயிற்சியாளர் மர்ம மரணம்

இந்திய கிரிக்கெட் அணியின் உடற்பயிற்சியாளர் மர்ம மரணம்

இந்திய கிரிக்கெட் அணியின் உடற்பயிற்சியாளர் மர்ம மரணம்
Published on

பத்தொன்பது வயதுக்குட்பட்டோருக்கான இந்திய கிரிக்கெட் அணியின் உடற்பயிற்சியாளர் ராஜேஷ் ச‌வந்த் மும்பையில் உள்ள ஹோட்டல் ஒன்றில் ‌‌உயிரி‌ழந்தார்.

காலையில்‌‌ ‌‌அ‌வர் பயிற்சிக்கு வராததால், அவரை அழைத்து வருவதாக ஹோட்டல்‌‌‌ அறைக்கு அணியின் பிற நிர்வாகிகள் சென்றனர். ‌கதவை தட்டி வெகுநேரமாகியும் அவர் திறக்காததால் சந்தேகமடைந்த சக நிர்வாகிகள் பூட்டை உடைத்து பார்த்தனர். அப்போது உயிரிழந்த நிலையில் ராஜேஷ் சவந்த் கிடந்தது கண்டறியப்பட்டது. மாரடைப்பால் அவர் உயிரிழந்திருக்கலாம் எனக் கருதப்படுகிறது. எனினும் உடல்கூறு பரிசோதனைக்கு பின்னரே மரணத்திற்கான காரணம் தெரியவரும் என மும்பை காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். மரணமடைந்துள்ள ராஜேஷ் சவந்திக்கு 40 வயதே ஆகிறது. ராஜேஷ் சவந்த்தின் மரணத்தையடுத்து, இன்று நடைபெறவிருந்த செய்தியாளர் சந்திப்பை பயிற்சியாளர் ராகுல் டிராவிட் ரத்து செய்தார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com