வெஸ்ட் இண்டீஸ்க்கு எதிரான டி20 தொடரில் விராட் கோலிக்கு ஓய்வு-அஸ்வினுக்கு மீண்டும் வாய்ப்பு

வெஸ்ட் இண்டீஸ்க்கு எதிரான டி20 தொடரில் விராட் கோலிக்கு ஓய்வு-அஸ்வினுக்கு மீண்டும் வாய்ப்பு

வெஸ்ட் இண்டீஸ்க்கு எதிரான டி20 தொடரில் விராட் கோலிக்கு ஓய்வு-அஸ்வினுக்கு மீண்டும் வாய்ப்பு
Published on

வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட டி20 தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

இம்மாத இறுதியில் வெஸ்ட் இண்டீஸ் செல்லும் இந்திய கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரிலும், 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரிலும் விளையாட உள்ளது. முன்னதாக, ஜூலை 22 முதல் தொடங்கும் ஒருநாள் தொடருக்கான 16 பேர் கொண்ட இந்திய அணியை பிசிசிஐ கடந்த சில தினங்களுக்கு முன்னர் அறிவித்தது. அந்த அணிக்கு ஷிகர் தவான் கேப்டனாகவும், ரவீந்திர ஜடேஜா துணைத் கேப்டனாகவும் செயல்படுவார்கள் என்றும் தெரிவித்து இருந்து. இத்தொடரில் இருந்து கேப்டன் ரோகித் சர்மா, விராட் கோலி, பும்ரா, ரிஷப் பண்ட், முகம்மது ஷமி, ஹர்திக் பாண்டியா போன்ற இந்திய வீரர்களுக்கு ஓய்வு அளிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் ஜூலை 29 முதல் தொடங்கும் 5 போட்டிகள் கொண்ட டி20 தொடருக்கான இந்திய அணியை பிசிசிஐ தற்போது அறிவித்துள்ளது. ஒருநாள் தொடரை தொடர்ந்து டி20 தொடரிலும் விராட் கோலிக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. ஒருநாள் தொடரில் ஓய்வில் இருக்கும் ரோகித் சர்மா டி20 தொடரில் மீண்டும் கேப்டன் பொறுப்பை ஏற்கிறார். அஷ்வினுக்கு மீண்டும் வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. பணிச்சுமையை மனதில் கொண்டு பும்ராவுக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. கேஎல் ராகுல் மற்றும் குல்தீப் யாதவ் ஆகிய இருவரும் உடற்தகுதியை பொறுத்து அணிக்கு திரும்புவர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.  

வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான டி20 இந்திய அணி:

ரோகித் சர்மா (கேப்டன்), இஷான் கிஷன், கேஎல் ராகுல், சூர்யகுமார் யாதவ், தீபக் ஹூடா, எஸ் ஐயர், தினேஷ் கார்த்திக், ரிஷப் பண்ட் , ஹர்டிக் பாண்டியா, ஜடேஜா, அக்சர் படேல், அஷ்வின், ரவி பிஷ்னோய், குல்தீப் யாதவ், புவனேஷ் குமார், அவேஷ் கான், ஹர்ஷல் படேல், அர்ஷ்தீப் சிங்.

இதையும் படிக்கலாம்: கோலிக்கான இரண்டு ஆப்சன்கள்' - புதிய பாதையில் இந்திய அணியும் பரிதவிக்கும் கோலியும்

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com