நியூசிலாந்து தொடர்: ராகுல் டிராவிடுக்கு ரெஸ்ட்- பயிற்சியாளராக வி.வி.எஸ் லட்சுமண் நியமனம்

நியூசிலாந்து தொடர்: ராகுல் டிராவிடுக்கு ரெஸ்ட்- பயிற்சியாளராக வி.வி.எஸ் லட்சுமண் நியமனம்
நியூசிலாந்து தொடர்: ராகுல் டிராவிடுக்கு ரெஸ்ட்- பயிற்சியாளராக  வி.வி.எஸ் லட்சுமண் நியமனம்

நியூசிலாந்து தொடரில் தலைமைப் பயிற்சியாளர் ராகுல் டிராவிட்டுக்கு ஓய்வு வழங்கப்பட்டுள்ளது.

ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் அரையிறுதியில் இங்கிலாந்திடம் படுதோல்வி அடைந்து இந்திய அணி வெளியேறியது. இந்த நிலையில் இந்திய அணி அடுத்ததாக நியூசிலாந்திற்கும், அதை தொடர்ந்து வங்காள தேசத்திற்கும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு டி20, ஒருநாள், டெஸ்ட் தொடர்களில் விளையாடுகிறது. நியூசிலாந்து மற்றும் வங்காளதேச சுற்றுப்பயணத்திற்கான நான்கு வகையான இந்திய அணியை பிசிசிஐ கடந்த மாதம் அறிவித்தது.

முதலில் நியூசிலாந்து அணிக்கு எதிராக இந்திய அணி ஒருநாள் மற்றும் டி20 தொடர்களில் விளையாடுகிறது. இரு அணிகளுக்கும் இடையிலான 3 போட்டிகள் கொண்ட டி20 தொடர் நவம்பர் 18 முதல் நவம்பர் 22 வரை நடைபெறுகிறது. இதை தொடர்ந்து ஒருநாள் தொடர் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் நவம்பர் 25-ல் தொடங்குகிறது. நியூசிலாந்திற்கு எதிரான தொடரில் ரோகித் சர்மா, விராட் கோலி, கேஎல் ராகுல், ரவிச்சந்திரன் அஷ்வின் ஆகியோருக்கு ஓய்வு வழங்கப்பட்டுள்ளது. இதனால் டி20 தொடரில் இந்திய அணியை ஹர்திக் பாண்டியா வழிநடத்துகிறார். ஒருநாள் அணியை ஷிகார் தவான் வழிநடத்துகிறார்.

இந்த நிலையில் நியூசிலாந்து தொடரில் பயிற்சியாளர் ராகுல் டிராவிட்டுக்கு ஓய்வு வழங்கப்பட்டுள்ளது. இந்த தொடருக்கான இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக முன்னாள் வீரர் வி.வி.எஸ் லட்சுமண் நியமிக்கப்பட்டுள்ளார். லக்ஷ்மனுடன் பேட்டிங் பயிற்சியாளர் ஹிருஷிகேஷ் கனிட்கர், பந்துவீச்சு பயிற்சியாளர் சாய்ராஜ் பஹுதுலே நியூசிலாந்துக்கு செல்வார்கள் என பிசிசிஐயின் அதிகாரி ஒருவர் பிடிஐ செய்தி நிறுவனத்திடம் தெரிவித்துள்ளார்.

நியூசிலாந்து தொடருக்கான இந்திய டி20 அணி: ஹர்திக் பாண்டியா (கேப்டன்), ரிஷப் பண்ட் (துணை கேப்டன்), ஷுப்மன் கில், இஷான் கிஷன், தீபக் ஹூடா, சூர்ய குமார் யாதவ், ஷ்ரேயாஸ் ஐயர், சஞ்சு சாம்சன், வாஷிங்டன் சுந்தர், யுஸ்வேந்திர சாஹல், குல்தீப் யாதவ், அர்ஷ்தீப் சிங், ஹர்ஷல் படேல் , முகமது. சிராஜ், புவனேஷ்வர் குமார், உம்ரான் மாலிக்.

நியூசிலாந்து தொடருக்கான இந்திய ஒருநாள் அணி: ஷிகர் தவான் (கேப்டன்), ரிஷப் பண்ட் (துணை கேப்டன்), ஷுப்மன் கில், தீபக் ஹூடா, சூர்ய குமார் யாதவ், ஷ்ரேயாஸ் ஐயர், சஞ்சு சாம்சன், வாஷிங்டன் சுந்தர், ஷர்துல் தாக்கூர், ஷாபாஸ் அகமது, யுஸ்வேந்திர சாஹல், குல்தீப் யாதவ், அர்ஷ்தீப் சிங் , தீபக் சாஹர், குல்தீப் சென், உம்ரான் மாலிக்.

இதையும் படிக்கலாமே: சீனியர்களை அழைத்த பிசிசிஐ - வீரர்கள் நாடு திரும்பியதும் காத்திருக்கும் அதிரடி மாற்றங்கள்!

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com