விளையாட்டு
துபாயில் இந்தியா-பாக் கிரிக்கெட் தொடரா? பிசிசிஐ மறுப்பு
துபாயில் இந்தியா-பாக் கிரிக்கெட் தொடரா? பிசிசிஐ மறுப்பு
பாகிஸ்தான் அணியுடன் கிரிக்கெட் தொடரில் விளையாடப் போவதாக வெளியான தகவலை இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் மறுத்துள்ளது.
இது தொடர்பாக மத்திய அரசுடன் எந்தப் பேச்சுவார்த்தையும் நடத்தவில்லை என பிசிசிஐ நிர்வாகிகள் விளக்கம் அளித்துள்ளனர். இந்தியா - பாகிஸ்தான் அணிகள் இடையிலான கிரிக்கெட் தொடரை, துபாயில் நடத்த பிசிசிஐ விருப்பம் தெரிவித்துள்ளதாகவும், அதற்கு அனுமதி கோரி மத்திய உள்துறை அமைச்சகத்திற்கு கடிதம் எழுதப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியானது. தற்போது, அது உண்மையில்லை என இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் மறுத்துள்ளது. எல்லையில் நிலவிய பதற்றமான சூழல் காரணமாக இந்தியா-பாகிஸ்தான் அணிகள் இடையிலான கிரிக்கெட் தொடருக்கு மத்திய அரசு கடந்த ஆண்டு அனுமதி மறுத்திருந்தது.