2023 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்: 6 நாடுகளுடன் மோதும் இந்தியா

2023 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்: 6 நாடுகளுடன் மோதும் இந்தியா
2023 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்: 6 நாடுகளுடன் மோதும் இந்தியா

2023-ஆம் ஆண்டு நடைபெற இருக்கும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற இந்திய கிரிக்கெட் அணி 2 ஆண்டு காலத்தில் 6 நாடுகளுடன் மோத இருக்கிறது.

2019-ஆம் ஆண்டு முதல் முறையாக உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியை ஐசிசி அறிவித்தது. அதன்படி 2021 ஆம் ஆண்டு அண்மையில் நடந்து முடிந்த இறுதிப் போட்டியில் இந்தியா - நியூசிலாந்து அணிகள் மோதின. இதில் நியூசிலாந்து வெற்றிப்பெற்று உலக டெஸ்ட் சாம்பியன் ஆனது. இதனையடுத்து 2023 ஆம் ஆண்டு உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டி நடக்க இருக்கிறது. அப்போது நடைபெற இருக்கும் இறுதி ஆட்டத்துக்கு தகுதிப் பெற இந்திய அணி 6 நாடுகளுடன் டெஸ்ட் தொடரில் விளையாட இருக்கிறது.

போட்டிகளின் விவரம்

ஆகஸ்ட் 4 முதல் செப்டம்பர் 14 ஆம் தேதி வரை இந்தியா - இங்கிலாந்து இடையே 5 டெஸ்ட் போட்டிகள்

இந்தியா - நியூசிலாந்து இடையே நவம்பரில் இரண்டு டெஸ்ட் போட்டிகள்

இந்தியா - தென் ஆப்பிரிக்கா இடையே டிசம்பர் 2021-ல் தொடங்கி ஜனவரி 2022 வரை இரண்டு டெஸ்ட் போட்டிகள்

இலங்கை - இந்தியா: 2022 -ல் மார்ச் 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர்

இந்தியா - ஆஸ்திரேலியா இடையே 2022 அக்டோபர் - நவம்பர் மாதம் 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர்

இந்தியா - வங்கசேதம் இடையே 2023 ஆம் ஆண்டு தொடக்கத்தில் இரு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர்

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com