விளையாட்டு
இந்தியாவில் பெண்கள் U-17 உலகக் கோப்பை கால்பந்து போட்டி
இந்தியாவில் பெண்கள் U-17 உலகக் கோப்பை கால்பந்து போட்டி
2020 ஆம் ஆண்டில் நடக்கவுள்ள 17 வயதுக்குட்பட்டோருக்கான பெண்கள் உலகக்கோப்பை போட்டிகளை, இந்தியாவில் நடத்த சர்வதேச கால்பந்து சம்மேளனம் ஒப்புதல் அளித்துள்ளது.
இதுகுறித்து அகில இந்திய கால்பந்து கழகத்தின் செயலாளர் கிருஷ்ணதாஸ் அளித்துள்ள பேட்டியில் இதைத் தெரிவித்தார். அவர் மேலும் கூறும் போது, இந்தியாவில் பெண்கள் மத்தியில் கால்பந்து போட்டிகளை மேம்படுத்த இந்த வாய்ப்பு உபயோகமாக இருக்கும் என தெரிவித்தார். மேலும் 20 வயதுக்குட்பட்டோருக்கான பெண்கள் உலகக் கோப்பை போட்டிகளை இந்தியாவில் நடத்த அனுமதி கோரியுள்ளதாகவும் தெரி வித்துள்ளார்.