\
ஒருநாள் தொடரை வெல்லுமா இந்தியா? வெற்றிக் கணக்கை தொடங்குமா இலங்கை?- இன்று 2-ஆவது போட்டி

ஒருநாள் தொடரை வெல்லுமா இந்தியா? வெற்றிக் கணக்கை தொடங்குமா இலங்கை?- இன்று 2-ஆவது போட்டி

ஒருநாள் தொடரை வெல்லுமா இந்தியா? வெற்றிக் கணக்கை தொடங்குமா இலங்கை?- இன்று 2-ஆவது போட்டி
Published on: 

இந்தியா - இலங்கை அணிகள் இடையிலான இரண்டாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி கொழும்பு பிரேமதாசா மைதானத்தில் இன்று நடைபெறுகிறது.

மூன்று ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் இந்தியா - இலங்கை அணிகள் மோதுகின்றன. முதல் ஒருநாள் போட்டியில் இந்தியா அபாரமாக வெற்றிப்பெற்றதையடுத்து, இந்தப் போட்டியில் வென்று தொடரை வெல்லும் முனைப்பில் இந்திய வீரர்கள் இன்று களம் காண்கின்றனர். இன்றையப் போட்டியில் வென்று தொடரை சமன் செய்யும் முனைப்பில், இலங்கை வீரர்கள் இன்று மோத தயாராக இருக்கின்றனர்.

இந்தப் போட்டியில் இலங்கை பேட்ஸ்மேன்கள் அதிரடியாகவும், நிலைத்து நின்று விளையாடினால் பெரிய ரன்களை சேர்க்கலாம். இதனால் வலுவான இந்திய பேட்டிங்க்கு நெருக்கடி கொடுக்க முடியும்.

இந்திய அணியை பொறுத்தவரை சுழற்பந்துவீச்சு பலமாகவும், வேகப்பந்துவீச்சு சற்றே வலுவிழந்ததாகவும் இருக்கிறது. கடந்தப் போட்டியில் துணைக் கேப்டனான புவனேஷ்வர் குமார் இறுதி ஓவர்களில் ரன்களை வாரி கொடுத்தார். அதனால் இன்றையப் போட்டியில் அவருக்கு பதிலாக நவ்தீப் சைனி சேர்க்கப்படுவார் எனக் கூறப்படுகிறது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com