பண்ட் Vs இஷான் கிஷன் - தவான் Vs ராகுல்: முதல் போட்டியில் இந்திய அணியின் திட்டம் என்ன?

பண்ட் Vs இஷான் கிஷன் - தவான் Vs ராகுல்: முதல் போட்டியில் இந்திய அணியின் திட்டம் என்ன?
பண்ட் Vs இஷான் கிஷன் - தவான் Vs ராகுல்: முதல்  போட்டியில் இந்திய அணியின் திட்டம் என்ன?
Published on

இந்தியா - வங்கதேசம் அணிகளுக்கு இடையிலான முதல் ஒருநாள் போட்டி இன்று மிர்பூரில் பகலிரவு ஆட்டமாக நடைபெறுகிறது. ரோகித் சர்மா தலைமையில் இந்திய அணியும், லிட்டன் தாஸ் தலைமையிலான வங்கதேச அணியும் முதல் ஒருநாள் போட்டியில் களம் காண்கின்றன.

அண்மையில் நியூசிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட இந்திய கிரிக்கெட் அணி டி20 தொடரை வென்று, ஒருநாள் தொடரில் தோல்வியடைந்தது. இதனால் ஷிகர் தவன் தலைமையிலான இந்திய அணி மீது கடுமையான விமர்சனங்கள் எழுந்தன. நியூசிலாந்து தொடரில் பந்துவீச்சாளர்கள் யாரும் குறிப்பிடத்தக்க அளவில் சோபிக்கவில்லை என்பதே உண்மை. அந்தத் தொடரில் சுப்மன் கில், ஷிகர் தவான், சூர்யகுமார் யாதவ், வாஷிங்டன் சுந்தர் மட்டுமே சிறப்பான மற்றும் சீரான ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.

அடுத்த ஆண்டு இந்தியாவில் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் நடைபெற இருப்பதால். இந்தியா வலுவான அணியை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறது. அதற்கு வங்கதேசத்துக்கு எதிரான ஒருநாள் தொடர் ஒரு வாய்ப்பாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்திய அணிக்கு இன்றையப் போட்டியில் ரோகித் சர்மாவுடன் தொடக்க பேட்ஸ்மேனாக இறங்கப்போவது ஷிகர் தவானா அல்லது கே.எல்.ராகுலா என இன்னும் முடிவாகவில்லை. அதேபோல விக்கெட் கீப்பராக ரிஷப் பண்ட் அல்லது இஷான் கிஷனா என்றும் தெரியவில்லை.

நியூசலாந்து தொடரில் ரிஷப் பண்ட் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தாததால் மீண்டும் வங்கதேசத்துக்கு எதிரான போட்டியில் அவருக்கு வாய்ப்பு வழங்கப்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. பந்துவீச்சில் முகமது சிராஜ், உம்ரான் மாலிக் ஆகியோருக்கு இந்த ஆட்டத்தில் வாய்ப்பு வழங்கப்படும் என தெரிகிறது. இந்திய அணி கடைசியாக 2015 ஆம் ஆண்டு வங்கதேசம் சென்று 3 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் போட்டி தொடரில் விளையாடியது. அப்போது 2-1 என்ற கணக்கில் இந்தியாவை வீழ்த்தி இருந்தது வங்கதேசம்.

இவ்விரு அணிகளும் ஒருநாள் போட்டியில் இதுவரை 36 முறை மோதி இருக்கின்றன. இதில் இந்தியா 30 ஆட்டங்களிலும், வங்கதேசம் 5 ஆட்டங்களிலும் வெற்றி பெற்றுள்ளன.

இந்திய அணி (உத்தேசம்): ரோகித் சர்மா, கே.எல்.ராகுல், விராட் கோலி, ஸ்ரேயாஸ் ஐயர், ரிஷப் பண்ட், வாஷிங்கடன் சுந்தர், ஷபாஸ் அகமது, ஷர்துல் தாக்குர், தீபக் சஹார், முகமது சிராஜ், உம்ரான் மாலிக்.

வங்கதேசம் அணி (உத்தேசம்): லிட்டன் தாஸ், அனாமுல் ஹக், ஷாகிப் அல் ஹசன், யாசிர் அலி, மகமதுல்லா, முஷ்பிகிர் ரஹீம், அபிஃப் ஹூசைன், மெகிதி ஹசன், முஸ்தபிசுர் ரஹ்மான், ஹசன் மஹ்முத், ஷோரிபுல் இஸ்லாம்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com