பங்களாதேஷ்க்கு எதிரான டெஸ்ட் போட்டி: ஷூப்மன் கில் சேர்ப்பு

பங்களாதேஷ்க்கு எதிரான டெஸ்ட் போட்டி: ஷூப்மன் கில் சேர்ப்பு
பங்களாதேஷ்க்கு எதிரான டெஸ்ட் போட்டி: ஷூப்மன் கில் சேர்ப்பு

பங்களாதேஷ் அணிக்கு எதிராக நடைபெறவுள்ள இரண்டு டெஸ்ட் போட்டிகளுக்கு விராட் கோலி கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். மேலும், டெஸ்ட் அணியில் இளம் வீரர் ஷூப்மன் கில்லும் சேர்க்கப்பட்டுள்ளார்.

இந்தியா - பங்களாதேஷ் இடையிலான முதல் டெஸ்ட் போட்டி இந்தூரில் நவம்பர் 14-ஆம் தேதி தொடங்குகிறது. இரண்டாவது டெஸ்ட் போட்டி நவம்பர் 22-ஆம் தேதி கொல்கத்தாவில் நடைபெறுகிறது. இந்த இரு போட்டிகளுக்கான வீரர்கள் பட்டியலை பிசிசிஐ இன்று அறிவித்தது.

இந்திய டெஸ்ட் அணி: விராட் கோலி, ரோகித் சர்மா, மயங்க் அகர்வால், புஜாரா, ரஹானே, ஹனுமா விஹாரி, சாஹா, ஜடேஜா, அஸ்வின், குல்தீப் யாதவ், முகமது சமி, உமேஷ் யாதவ், இஷாந்த் சர்மா, ஷூப்மன் கில், ரிஷப் பன்ட் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.
 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com