முதல் ஒரு நாள் கிரிக்கெட் போட்டி: சாதிக்குமா இந்தியா?
இந்தியா- இலங்கை இடையேயான ஒருநாள் கிரிக்கெட் தொடரின் முதல் போட்டி தர்மசாலாவில் இன்று நடைபெறவுள்ளது.
இலங்கை கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து கிரிக்கெட் விளையாடி வருகிறது. டெஸ்ட் தொடரை இந்திய அணியிடம் இழந்த இலங்கை, அடுத்து 3 ஒரு நாள் போட்டிகளில் விளையாடுகிறது. முதல் ஒரு நாள் போட்டி தர்மசாலாவில் இன்று நடக்கிறது.
இதில் கேப்டன் விராத் கோலிக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளதால் ரோகித் சர்மா தலைமையில் இந்தியா களமிறங்குகிறது. கேதர் ஜாதவ்வுக்கு காயம் ஏற்பட்டுள்ளதால்
தமிழகத்தை சேர்ந்த இளம் வீர் வீரர் வாஷ்ங்டன் சுந்தர் ஒரு நாள் போட்டிக்கு அழைக்கப்பட்டுள்ளார். இந்தப் போட்டியில் ஆடும் லெவனில் அவர் இருப்பார் என்று கூறப்படுகிறது.
இலங்கையுடனான டெஸ்ட் தொடரில் பெற்ற வெற்றியை ஒருநாள் தொடரிலும் பெறும் முனைப்பில் இந்தியா களமிறங்குகிறது. டெஸ்ட் தொடரைப் போன்று ஒருநாள் தொடரிலும் வெற்றி பெற்றால் இந்திய அணி தரவரிசையில் முதலிடத்திற்கு முன்னேறிவிடும் என்பதால் போட்டி பரபரப்பாக இருக்கும்.