தினேஷ் கார்த்திக், ராயுடு "டக்" அவுட் ! பரிதாப நிலையில் இந்திய அணி

தினேஷ் கார்த்திக், ராயுடு "டக்" அவுட் ! பரிதாப நிலையில் இந்திய அணி

தினேஷ் கார்த்திக், ராயுடு "டக்" அவுட் ! பரிதாப நிலையில் இந்திய அணி
Published on

நியூசிலாந்தின் வேகப் பந்து வீச்சை சமாளிக்க முடியாமஸ் நான்காவது ஒருநாள் போட்டியில் திணறி வருகிறது. இந்திய அணி இப்போது 40 ரன்களுக்கு 7 விக்கெட்டுகளை இழந்து பரிதாப நிலையில் இருக்கிறது.

இந்திய கிரிக்கெட் அணி, நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து ஐந்து போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் விளையாடி வருகிறது. நேப்பியரில் நடந்த முதலாவது போட்டியில் வெற்ற பெற்ற இந்திய அணி, மவுன்ட் மாங்கனுயி-ல் நடந்த இரண்டா வது மற்றும் மூன்றாவது போட்டியிலும் வெற்றி பெற்றது. இதையடுத்து இந்த தொடரில் 3-0 என்ற கணக்கில் இந்திய அணி முன்னிலை வகிக்கிறது. இந்நிலையில் நான்காவது ஒருநாள் போட்டி, ஹாமில்டனில் இன்று நடந்து வருகிறது.

கேப்டன் விராத் கோலிக்கு ஓய்வு கொடுக்கப்பட்டுள்ளதால், இன்றைய போட்டியில் ரோகித் சர்மா கேப்டன் பொறுப்பை ஏற்கிறார். இது அவருக்கு 200 வது ஒரு நாள் போட்டி. கடந்த போட்டியில் காயம் காரணமாக விளையாடாமல் இருந்த தோனி, இன்றைய போட்டியிலும் ஆடவில்லை. இளம் வீரர் சுப்மான் கில், அறிமுக வீரராக களமிறங்குகிறார். அவருக்கு இந்திய கிரிக்கெட் அணியின் தொப்பியை, தோனி வழங்கினார். முகமது ஷமிக்கு பதிலாக கலீல் அகமது சேர்க்கப்பட்டுள்ளார். நியூசிலாந்து அணியிலும் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

டாஸ் வென்ற நியூசிலாந்து அணி, முதலில் பீல்டிங்கை தேர்வு செய்தது. இதையடுத்து இந்திய அணியின் தொடக்க ஆட்டக் காரர்கள் ரோகித் சர்மாவும் ஷிகர் தவானும் களமிறங்கினர். இதில் ரோகித் சர்மா 7 ரன்களிலும், ஷிகர் தவான் 13 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். இதற்கடுத்து களமிறங்கிய அறிமுக வீரர் ஷுப்மன் கில் 9 ரன்கள் எடுத்து ஏமாற்றமளித்தார். சரிவில் இருந்த இந்தியாவை மீட்பார்கள் என எதிர்பார்க்கப்பட்ட ராயுடுவும், கார்த்திக்கும் டக் அவுட் ஆகி வெளியேறினர். இதற்கடுத்து ஜாதவ் 1 ரன்களில் அவுட்டானார். இப்போது பாண்ட்யாவும், புவேஸ்வர் குமாரும் ஆடி வருகின்றனர். நியூசிலாந்து வேகப்பந்து வீச்சாளர் போல்ட் 4 விக்கெட்டையும், கிராண்ட்ஹோம் 2 விக்கெட்டையும் எடுத்தனர். 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com