\
ராஞ்சி டெஸ்ட்: இந்திய அணி நிதான ஆட்டம்

ராஞ்சி டெஸ்ட்: இந்திய அணி நிதான ஆட்டம்

ராஞ்சி டெஸ்ட்: இந்திய அணி நிதான ஆட்டம்
Published on

ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் ‌லோகேஷ் ராகுல் அரைசதம் அடித்து இந்திய அணிக்கு சிறப்பான தொடக்கத்தை ஏற்ப‌டுத்திக் கொடுத்துள்ளார்.‌

ராஞ்சியில் நடைபெற்று வரும் இந்தப் போட்டியின் முதல் இன்னிங்சில் 4 விக்கெட் இழப்பிற்கு 299 ரன்கள் என்ற நிலையில் ஆஸ்திரேலிய அணி இரண்டாவது நாள் ஆட்டத்தைத் தொடர்ந்தது. ஆல்ரவுண்டர் மேக்ஸ்வெல், சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் தமது முதல் சதத்தைப் பதிவு செய்தார். ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்சில் 451 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தது. கேப்டன் ஸ்மித் ஆட்டமிழக்காமல் 178 ரன்கள் சேர்த்தார். இந்திய அணி தரப்பில் ரவீந்திர ஜடேஜா 5 விக்கெட்களைக் கைப்பற்றினார். பின்னர் முதல் இன்னிங்ஸைத் தொடங்கிய இந்திய அணியில் லோகேஷ் ராகுலும், முரளி விஜய்-யும் தொடக்க விக்கெட்டிற்கு 91 ரன்கள் சேர்த்தனர். ராகுல் 67 ரன்களில் ஆட்டமிழந்தார். இரண்டாம் நாள் முடிவில் இந்திய அணி ஒரு விக்கெட் இழப்பிற்கு 120 ரன்கள் எடுத்தது. முரளி விஜய் 42 ரன்களுடனும், புஜாரா 10 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com