பயிற்சி ஆட்டத்தில் இந்திய அணி ஆடியிருக்க வேண்டும்: வெங்சர்க்கர்

பயிற்சி ஆட்டத்தில் இந்திய அணி ஆடியிருக்க வேண்டும்: வெங்சர்க்கர்

பயிற்சி ஆட்டத்தில் இந்திய அணி ஆடியிருக்க வேண்டும்: வெங்சர்க்கர்
Published on

இந்திய கிரிக்கெட் அணி தென்னாப்பிரிக்காவில், சில பயிற்சி ஆட்டத்தில் பங்கேற்றிருக்க வேண்டும் என்று இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் திலீப் வெங்சர்க்கர் கூறினார்.

இந்திய கிரிக்கெட் அணி, தென்னாப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் செய்து கிரிக்கெட் விளையாடி வருகிறது. முதல் போட்டி, கேப்டவுனில் நடந்து வருகிறது. இதில் முதல் இன்னிங்ஸில் இந்திய அணி தடுமாறி வருகிறது. 

இந்நிலையில் நாக்பூரில் நடந்த விழா ஒன்றில் கலந்துகொண்ட இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் திலீப் வெங்சர்க்கர் கூறும்போது, ’தென்னாப்பிரிக்காவின் சூழ்நிலையை ஏற்றுக்கொள்வதற்கு சில பயிற்சி ஆட்டங்களில் இந்திய கிரிக்கெட் அணி ஆடியிருக்க வேண்டும்.

ஆடியிருந்தால் சிறப்பாக விளையாடி இருக்க முடியும். இதற்கு முன் இந்தியாவில் நடந்த இலங்கை தொடர் தேவையில்லாத ஒன்று. ஏற்கனவே இலங்கை சென்று விளையாடி வந்த பிறகு, இங்கு ஏன் திரும்பவும் ஆட வேண்டும்? விராத் கோலி தலைமையிலான இந்திய அணி, இப்போது நன்றாக ஆடி வருகிறது. தென்னாப்பிரிக்காவிலும் நன்றாக விளையாடுவார்கள் என்று நம்புகிறேன்’ என்றார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com