சாம்பியனாகுமா இந்தியா ? ஆஸியுடன் இன்று மோதல்

சாம்பியனாகுமா இந்தியா ? ஆஸியுடன் இன்று மோதல்
சாம்பியனாகுமா இந்தியா ? ஆஸியுடன் இன்று மோதல்

சாம்பியனஸ் கோப்பை ஹாக்கி தொடரின் இறுதிப் போட்டியில் இந்தியா இன்று பலம் வாய்ந்த ஆஸ்திரேலிய அணியை எதிர்கொள்கிறது. 37-வது சாம்பியன்ஸ் கோப்பை ஹாக்கி போட்டி நெதர்லாந்து நாட்டில் உள்ள பிரிடா (BREDA ) நகரில் நடந்து வருகிறது. 6 நாடுகள் கலந்து கொண்டுள்ள சாம்பியன்ஸ் கோப்பை ஹாக்கிப் போட்டியில் நேற்று நடந்த லீக் போட்டியில் இந்திய அணி, நெதர்லாந்து அணியை எதிர்கொண்டது. இது கடைசி லீக் போட்டி. இந்தப் போட்டியை டிரா செய்தாலே இந்திய அணி இறுதிப்போட்டிக்கு தகுதி பெறும் என்ற நிலை இருந்தது. 

சொந்த மண்ணில் விளையாடுவதால் நெதர்லாந்து அணி இறுதிப்போட்டிக்கு தகுதிபெற வெற்றி பெற்றே ஆக வேண்டும் என்ற கட்டாயத்துடன் களமிறங்கியது. இந்தப்போட்டி ஒன்றுக்கு ஒன்று என்ற கோல் கணக்கில் டிராவில் முடிவடைந்தது.  இந்திய அணிக்காக 47 ஆவது நிமிடத்தில் மன்தீப் சிங்கும், நெதர்லாந்து அணிக்காக 55 ஆவது நிமிடத்தில் பிரிங்க்மேனும் கோல் அடித்தனர். இந்தப்போட்டியின் முடிவையடுத்து 8‌ புள்ளிகளுடன் இரண்டாவது இடம் பிடித்து இந்திய அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.

இன்று நடைபெறும் இறுதியாட்டத்தில் லீக் சுற்றில் முதலிடம் பிடித்த ஆஸ்திரேலிய அணியை எதிர்த்து இந்திய அணி விளையாடுகிறது. இந்திய அணி ஏற்கெனவே நடைபெற்ற லீக் போட்டியில் ஆஸ்யிடம் தோல்வியடைந்தது. இதனையடுத்து இறுதிப் போட்டியில் பழித்தீர்க்க வேண்டும் என்ற முனைப்பில் ஆஸியை சந்திக்கிறது இந்தியா. 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com