அதிக அளவில் 300 ரன்களை எடுத்த அணி என்ற பெருமையை, இந்திய கிரிக்கெட் அணி பெற்றுள்ளது.
ஒரு காலத்தில் கிரிக்கெட்டில், ஒரு அணி 250 ரன்கள் எடுப்பதே பெரிய விஷயமாக இருந்தது. பேட்ஸ்மேன்கள் அடித்து ஆடத் தொடங்கிய பிறகு 300 ரன்களுக்கு மேல் எடுப்பது சர்வ சாதாரணமாகிவிட்டது. அதுவும் டி20 போட்டிகளுக்குப் பிறகு ரன்களை இப்படி அதிரடியாக குவிப்பது அதிகரித்து வருகிறது.
இந்நிலையில் இந்தியா- வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையே நேற்று நடந்த போட்டியில் இந்திய அணி 310 ரன்களை எடுத்தது. இந்த ஆட்டத்தின் மூலம் 300 ரன்களை அதிக முறை எடுத்த அணி என்ற பெருமை இந்திய அணிக்கு கிடைத்துள்ளது. இந்தியாவுக்கு இது 96-வது 300 ரன்களாகும். ஆஸ்திரேலியா 95 முறை 300 ரன்களை கடந்துள்ளது.