மழை பாதிப்பு: இந்தியாவின் இலக்கு என்ன?

மழை பாதிப்பு: இந்தியாவின் இலக்கு என்ன?
மழை பாதிப்பு: இந்தியாவின் இலக்கு என்ன?

நடப்பு உலகக் கோப்பை தொடரில் முதல் அரை இறுதிப் போட்டி இந்தியா-நியூசிலாந்து அணிகள் இடையே நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. இதனையடுத்து களமிறங்கிய நியூசிலாந்து அணியின் தொடக்க ஆட்டக்காரர் கப்டில் ஒரு ரன்னில் வெளியேறினார். எனினும் கேப்டன் வில்லியம்சன்(67) மற்றும் ராஸ் டெய்லரின்(67*) பொறுப்பான ஆட்டத்தால் நியூசிலாந்து அணி 46.1 ஓவர்களில் 211 ரன்கள் எடுத்திருந்த போது மழை குறுக்கிட்டதால் ஆட்டம் நிறுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில் மழை நின்று நியூசிலாந்து அணி பேட்டிங்கை தொடராத பட்சத்தில் இந்திய அணியின் இலக்கு என்னவாக இருக்கும் என்பது குறித்து பார்க்கலாம். இந்திய அணிக்கு டக் வொர்த் லூயிஸ் முறையில் இலக்கு நிர்ணயிக்கப்படும். அதன்படி

ஓவர்கள்    இந்தியாவின் இலக்கு
46                    237
40                    223
35                    209
30                   192
25                   172
20                  148

மேலே குறிப்பிடப்பட்டுள்ள ஓவர்களின் அளவிற்கு ஏற்ப இந்திய அணிக்கு இலக்கு நிர்ணயிக்கப்படும்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com