எங்கள் அணியைக் கண்டு இந்தியா அஞ்சுகிறது: பாக். கிரிக்கெட் வாரியத் தலைவர் கருத்து

எங்கள் அணியைக் கண்டு இந்தியா அஞ்சுகிறது: பாக். கிரிக்கெட் வாரியத் தலைவர் கருத்து

எங்கள் அணியைக் கண்டு இந்தியா அஞ்சுகிறது: பாக். கிரிக்கெட் வாரியத் தலைவர் கருத்து
Published on

தங்கள் நாட்டு கிரிக்கெட் அணியைக் கண்டு இந்திய அணி அஞ்சுவதாக அந்நாட்டு கிரிக்கெட் வாரியத் தலைவர் சஹாரியார் கான் கூறியுள்ளார். 

சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் தொடரை வென்ற பாகிஸ்தான் அணி வீரர்களுக்கு நடத்தப்பட்ட பாராட்டு விழாவில் பேசிய அவர் இவ்வாறு தெரிவித்தார். மேலும் அவர் பேசுகையில், சாம்பியன்ஸ் கோப்பையை வென்றவுடன் இந்திய அணியை, நமது அணியுடன் இருநாடுகள் பங்கேற்கும் கிரிக்கெட் தொடரில் விளையாட வருமாறு சவால் விடுத்தோம். பாகிஸ்தான் அணியைக் கண்டு இந்திய அணி அஞ்சுவதால், இந்த தொடரில் விளையாட விரும்பவில்லை. ஐசிசி நடத்தும் தொடர்களில் பாகிஸ்தான் அணியை எதிர்கொள்வதாக அவர்களிடம் (பிசிசிஐ) இருந்து பதில் வந்தது என்று பேசினார். கடந்த 2007ம் ஆண்டு இந்தியாவுக்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்டு பாகிஸ்தான் அணி டெஸ்ட் தொடரில் பங்கேற்றது. அதன்பின்னர், இருநாடுகள் இடையே டெஸ்ட் போட்டிகள் கொண்ட கிரிக்கெட் தொடர் நடத்தப்படவில்லை. பாகிஸ்தான் அணியுடன் பங்கேற்பதாக இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் ஒப்புக்கொண்ட இரு தொடர்கள் நடக்கவில்லை என்பதால் பெரிய அளவில் நஷ்டம் ஏற்பட்டதாக பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் புகார் கூறிவருகிறது. 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com