இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான ஐந்தாவது மற்றும் கடைசி ஒருநாள் கிரிக்கெட் போட்டி நாக்பூரில் நாளை நடைபெறவுள்ளது.
பகலிரவு ஆட்டமாக நடைபெறும் இந்தப் போட்டி, நாளை பிற்பகல் 1.30 மணிக்குத் தொடங்குகிறது. விராட் கோலி தலைமையிலான இந்திய அணி ஏற்கனவே 3-1 என்ற கணக்கில் தொடரைக் கைப்பற்றிவிட்டது. கடைசிப் போட்டியிலும் வெற்றி பெற்று, தரவரிசையில் மீண்டும் முதலிடத்திற்கு முன்னேறும் முனைப்பில் இந்திய அணி ஆயத்தமாகி வருகிறது. தொடரை வெற்றியுடன் நிறைவு செய்யும் நோக்கில் ஆஸ்திரேலிய அணி வீரர்கள் பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர்.