இன்றுடன் நிறைவடைகிறது காமன்வெல்த் போட்டிகள்! இந்தியா பெற்ற இடம் என்ன?

இன்றுடன் நிறைவடைகிறது காமன்வெல்த் போட்டிகள்! இந்தியா பெற்ற இடம் என்ன?
இன்றுடன் நிறைவடைகிறது காமன்வெல்த் போட்டிகள்! இந்தியா பெற்ற இடம் என்ன?

இங்கிலாந்தில் நடைபெற்று வரும் காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகள் இன்றுடன் நிறைவடைய உள்ள நிலையில், பதக்கப்பட்டியலில் எந்தெந்த நாடுகள் முன்னிலையில் உள்ளன என்பதை பார்க்கலாம்.

22ஆவது காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியில், ஆஸ்திலிய அணி தொடக்கம் முதலே பதக்க வேட்டை நடத்தி வருகிறது. அந்த அணி, 65 தங்கம், 54 வெள்ளி, 53 வெண்கலம் என மொத்தம் 172 பதக்கங்களை வென்று முதலிடத்தில் நீடிக்கிறது. அதற்கு அடுத்தப்படியாக போட்டியை நடத்தும் இங்கிலாந்து, 56 தங்கம், 59 வெள்ளி, 52 வெண்கலம் என 167 பதக்கங்களை வென்றுள்ளது. கனடா 24 தங்கம், 32 வெள்ளி, 34 வெண்கலம் என 90 பதக்கங்களை வென்று மூன்றாவது இடத்தில் உள்ளது. நியூசிலாந்து அணி, 19 தங்கம், 12 வெள்ளி, 17 வெண்கலம் என 48 பதக்கங்களை வென்றுள்ளது.

அவற்றை தொடர்ந்து இந்தியா 18 தங்கம், 15 வெள்ளி, 22 வெண்கலப் பதக்கங்களை வென்று 5ஆவது இடத்தில் உள்ளது. கடைசி நாளான இன்று 5 தங்கப்பதக்கத்திற்கான போட்டிகளில் இந்திய வீரர், வீராங்கனைகள் களமிறங்குகின்றனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com